ஞாயிறு, 16 மார்ச், 2014

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை செலுத்தி சென்ற விமானி ஷா மீது சந்தேகம் வலுக்கிறது!

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை செலுத்திச் சென்ற விமானி, கேப்டன் ஜகாரி அஹ்மத் ஷா பற்றி புலனாய்வாளர்கள் சேகரித்துள்ள தகவல்கள், கவலையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளன.

விமானி ஷா, தீவிர அரசியல் சிந்தனையாளர் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. (விமானி ஷா, ‘ஜனநாயகம் செத்து விட்டது’ என்ற வாசகத்துடன் டீ-ஷர்ட் அணிந்திருப்பதை இடப்புற போட்டோவில் பார்க்கவும்)

விமானி, கேப்டன் ஜகாரி அஹ்மத் ஷா, மலேசியாவின் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிமின் தீவிர ஆதரவாளர் என தெரிகிறது.

இந்த அன்வர் இப்ராஹிமுக்கு மலேசிய நீதிமன்றம், 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் இப்ராஹிமுக்கு தண்டனை வழங்கப்பட்ட தினம் எது தெரியுமா?

மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்ற அதே தினம்தான் (விமானம் அன்று நள்ளிரவுக்கு சற்று பின் புறப்பட்டது. அதை மறுநாள் என்றும் சொல்லலாம்)!

விஷயம் அது மட்டுமல்ல. மேலும் உள்ளது.

இப்ராஹிமுக்கு தண்டனை வழங்கப்பட்டபோது, கோர்ட்டில் பார்வையாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர், விமானி கேப்டன் ஜகாரி அஹ்மத் ஷா!

புலனாய்வாளர்கள் சேகரித்த தகவல்களில் இருந்து, அன்றைய தினம் விமானி ஷா தமது வீட்டில் இருந்து புறப்பட்டு சுமார் 25 கி.மீ. காரில் பயணம் செய்து புத்ரஜாயா என்ற இடத்தை அடைந்தார். அங்குள்ள கோர்ட் ஒன்றில் அன்று எதிர்க்கட்சி தலைவர் இப்ராஹிம் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.

கோர்ட்டுக்கு சென்ற விமானி, அங்கு தமது அபிமானத்துக்குரிய அரசியல் தலைவரை பார்த்தார். இப்ராஹிமுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை என்ற தீர்ப்பு நீதிபதியால் வழங்கப்பட்ட போது, விமானி ஷா கோர்ட்டில் இருந்தார். அதன்பின் வீடு திரும்பினார்.

இங்குள்ள மற்றொரு நெருடலான விஷயம், விமானி ஷாவின் மனைவியும், 3 குழந்தைகளும் இதற்கு முதல் நாளே வீட்டைவிட்டு கிளம்பி சென்றிருந்தனர். அவர்கள் புறப்பட்டுச் சென்றது குடும்ப தகராறிலா என்பது குறித்த விசாரணையும் நடைபெறுகிறது.

கோர்ட்டில் இருந்து வீடு திரும்பிய விமானி ஷா, இரவு 9 மணிக்கு, பணிக்கு செல்வதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்தை நோக்கி சென்றார்.

MH370 தடம் இலக்க விமானத்தில் ஏறி அமர்ந்தார். அவரது வலப்புற சீட்டில், கோ-பைலட் ஃபாரிக் அப்துல் ஹமீட் அமர்ந்திருக்க, மிக துல்லியமான டேக்-ஆஃப் செய்து, விமானத்தை 2,700 மைல் தொலைவில் உள்ள பீய்ஜிங் செல்லும் வான் பாதையில் செலுத்திச் சென்றார்.

அந்த விமானம்தான் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், தரையுடன் சகல தொடர்புகளையும் இழந்தது.

viruvirupu

 தொடர்புடைய பக்கங்கள்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல