ஞாயிறு, 16 மார்ச், 2014

மலேசியன் விமானத்தை இரு விமானிகளும் ‘சேர்ந்து திட்டமிட்டு’ கடத்தி இருப்பார்களா?

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலேயே புலனாய்வு தற்போது நடப்பதாக தெரிகிறது. விமானத்தை பற்றிய துல்லியமான அறிவு உள்ள ஒருவர் அல்லது ஒரு குழுவினர்தான் இந்த கடத்தலை செய்திருக்க முடியும் என்ற முடிவுக்கும் வந்துள்ளார்கள் புலனாய்வாளர்கள்.

இந்த ரூட்டில் புலனாய்வு செய்யும்போது, முதலாவது சந்தேகம் விமானத்தை செலுத்திச் சென்ற விமானிகள்மீது ஏற்படுவது, தவிர்க்க முடியாதது. (மேலேயுள்ள போட்டோவில், பிரதான விமானி ஸகாரி அஹ்மத் ஷா)

இந்த இரு விமானிகளும் ஒன்று சேர்ந்து விமானத்தை கடத்தியிருக்கலாமோ என்ற கோணத்திலும் ஆராயப்பட்டது.

இந்த சந்தேகத்தை குறைக்கும் விதத்தில் ஒரு விஷயத்தை, மலேசியன் ஏர்லைன்ஸிடம் இருந்து தெரிந்து கொண்டுள்ளார்கள் புலனாய்வாளர்கள். அது என்னவென்றால், இந்த இரு விமானிகளும் தாம் ஒன்றாக பணிபுரிய வேண்டும் என்று தமது அலுவலகத்தில் கோரிக்கை வைக்கவில்லை.

பொதுவாக விமான நிறுவனங்கள் விமானிகளை குறிப்பிட்ட விமானத்துக்கு பணிபுரிய அனுப்புவது ஒருவித ‘ரொட்டேஷன் ராஸ்ட்டர்’ முறையிலேயே நடைபெறும். இதனால், ஒரே பைலட்டும், ஒரே கோ-பைலட்டும் எப்போதும் தொடர்ந்து பணிபுரிய வாய்ப்பு கிடைக்காது.

ஆனால் ஒரு விமானி, தமக்கு குறிப்பிட்ட கோ-பைலட் தேவை என்ற கோரிக்கையை தமது அலுவலகத்தில் கொடுக்கலாம். அதையடுத்து அந்த கோ-பைலட்டின் விருப்பமும் கேட்கப்படும். அவரும் அதே கோரிக்கையை விடுத்தால், இருவரும் முடிந்தவரை ஒன்றாக பணிபுரியும் விதத்தில் ராஸ்டர் அமைத்துக் கொள்வார்கள்.

புலனாய்வாளர்களுக்கு இப்போது மலேசியன் ஏர்லைன்ஸ் கொடுத்துள்ள தகவலின்படி, மாயமான விமானத்தில் பணிபுரிந்த இரு விமானிகளும் திட்டமிட்டு ஒன்றாக சென்றிருக்க வாய்ப்பில்லை. இதனால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணம் வலுவிழந்துள்ளது.

ஆனால், தற்போது புலனாய்வாளர்களின் சந்தேகம் இரு விமானிகளில் ஒருவர்மீது என்றுதான் தெரிகிறது.

viruvirupu

 தொடர்புடைய பக்கங்கள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல