ஞாயிறு, 16 மார்ச், 2014

மாயமான மலேசிய விமானம், யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியதா? புல்லரிக்க வைக்கும் கதை!

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகி ஒரு வாரத்துக்கு மேலாகி விட்ட நிலையில், அதை தேடும் முயற்சியில் தமது திறமையெல்லாம் வெளிக்காட்ட ஏவியேஷன் புலனாய்வாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதேபோல, சில மீடியாக்காரர்களுக்கு தமது கற்பனா சக்தியை வெளிக்காட்டவும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.


சில மீடியாக்களில் வெளியாகும் ‘கதை’கள் வாய்விட்டு சிரிக்க வைப்பதுடன், அதை எழுதியவரின் அறிவை எடைபோடவும் சந்தர்ப்பம் வழங்குகின்றன.

இந்தியா, ஹரியானாவில் இருந்து இயக்கப்படும் பிசினெஸ் இன்சைடர் இணையதளத்தில் விமானம் போன இடம் இதுவாக இருக்கலாமா? (Could this be where the plane was headed?) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், மலேசிய விமானம், “இலங்கை வடக்கு பகுதியில், சிறிய, அதிகம் பாவனையில் இல்லாத ஏர்போர்ட் ஒன்றில் தரையிறக்கப்பட்டு இருக்கலாமா?” என அலசியுள்ளார்கள்.

அதற்காக கூகுள் மேப் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதில் காண்பிக்கப்படும் விமான நிலையம், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம்!

உலகமே இந்த விமானத்தை தேடும் நிலையில், இந்த விமானம் ஓசைப்படாமல் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கி இருக்குமா என எழுதுவதற்கு நிறையவே ‘தில்’ வேண்டும்.

படிப்பவர்கள் சிரிப்பார்கள் என்ற கூச்சமே இல்லாமல் எழுதக்கூடியவரே சிறந்த செய்தியாளர் என எடுத்துக் கொண்டால், அந்தக் கட்டுரையை எழுதியவர், மிகச்சிறந்த செய்தியாளர்!

செய்தியாளர், போயிங் 777 விமானத்தை ஒருவேளை பார்த்திருக்கலாம். ஆனால், அந்த விமானத்தை லேன்டிங் செய்வதற்காக ரன்வேயில் பொசிஷனிங் செய்வதற்கு எப்படி டிசென்டிங் (Boeing 777 descending and approach towards runway) செய்யப்படும் என்பதை கேள்விப்பட்டதில்லை என்று தெரிகிறது.

30,000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் பறக்கும் ஒரு 777 விமானத்தை ரன்வேயை அப்ரோச் செய்வதற்கு எவ்வளவு தூரம் இருக்கும்போது, எவ்வளவு உயரம் குறைக்கப்பட வேண்டும் என்பதோ, பலாலி விமான நிலைய ரன்வேயில் இறக்க வேண்டுமானால், யாழ்ப்பாணத்தில், மக்கள் குடியிருப்புகள் உள்ள இடங்களுக்கு மேலாக 2,500 அடி உயரத்தில் பறக்க வேண்டியிருக்கும் என்பதோ, பாவம் அந்தாளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

போயிங் 777, ஒரு ஹெலிகாப்டர் அல்ல, மேலிருந்து கீழாக தரையில் இருந்து 90 டிகிரியில் இறங்குவதற்கு! இந்த விமானத்தை 2,500 அடிக்கு டிசென்டிங் செய்தால், மக்கள் குடியிருப்புகளில் பெரிய சத்தம் கேட்கும் அப்பனே!

அண்ணே.. யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய ரன்வேயை விரிவுபடுத்தும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அங்கு ரன்வே பணிகள் தற்போது இந்திய எஞ்சினியர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன என்பதாவது உமக்கு தெரியுமா?

முடியல.. வுட்டுருங்க சார்!


viruvirupu

 தொடர்புடைய பக்கங்கள்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல