சனி, 24 மே, 2014

சோனியாஜியின் 2 ஜியால் சோகத்தில் கருணாஜி!

ஒருவேளை தயாளு அம்மாள் கைது செய்யப்பட்டாலும் உரிய பாதுகாப்புடன் மருத்துவமனையில் வைத்திருக்க வாய்ப்புண்டாம். நிஜமாகவே கோபாலபுரம் மிரண்டுள்ளது!

பாராளு­மன்ற தேர்தல் தோல்­வியை விட கலைஞர் டி.வி.பணப்­ப­ரி­மாற்றம் தொடர்­பான ஈ.டி.(மத்­திய அமு­லாக்கல் பிரிவு) தயா­ளு­ அம்மாள் மீது தாக்கல் செய்த வழக்­குத்தான் கரு­ணா­நி­திக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றதாம்.



அது மட்­டு­மின்றி மொத்த தி.மு.க.வையும் திடுக்­கிட வைக்­கிற மாதிரி இந்த வழக்கின் கைது நட­வ­டிக்­கை­களும் இருக்கும் என டெல்­லியில் பேச்­ச­டி­ப­டு­கின்­றது. அதி­லி­ருந்து தனது அம்­மாவை காப்­பாற்­றவே ஸ்டாலின் களத்தில் குதித்­தி­ருக்­கிறார்.

தனக்கு நெருக்­க­மான மூத்த வழக்­க­றி­ஞர்கள் சில­ருடன் நீண்ட ஆலோ­சனை நடத்­தி­யி­ருக்­கிறார். டெல்­லியில் சட்­டத்தின் சந்­து­பொந்­து­களில் நுழைந்து வெளி­வ­ரக்­கூ­டிய இரு பிர­மு­கர்­களை ஸ்பெஷ­லாக வர­வ­ழைத்து தயாளு அம்­மாளை மீட்க முயற்சி எடுத்­துள்­ளாராம்.

மத்­திய தொலைத்­தொ­டர்பு அமைச்­ச­ராக இருந்த ஆ.ராசா, கலைஞர் டி.வி.யின் பங்­கு­தா­ரர்­க­ளான தயாளு அம்மாள், கனி­மொழி, சரத்­குமார் ஆகியோர் சட்­ட­வி­ரோ­த­மாக 200 கோடி ரூபாவை கலைஞர் டி.வி.க்கு ஏற்­பாடு செய்­த­தாக குற்றம் சாட்­டப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இந்த நிதியை பயன்­ப­டுத்­தி­ய­தாக கலைஞர் டி.வி.யின் நிர்­வாகி என்ற அடிப்­ப­டையில் மாறனின் சகோ­தரர் அமிர்­தமும் குற்­ற­வா­ளி­யாக சேர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 2 ஜி வழக்கில் தயா­ளுவைப் போல சில­ருக்கு ஒரு சாட்­சிதான் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. .

இவர்­க­ளைத்­த­விர 2 ஜி வழக்கில் ஏற்கனவே சிக்­கிய ஸ்வான் டெலிகொம் சினியுக் உட்­பட 15 நிறு­வ­னங்­களும் இந்தப் புதிய வழக்­கிலும் குற்­ற­வா­ளி­க­ளாக சேர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே, இன்­னொரு 2 ஜி வழக்­காக அனை­வ­ரை­யுமே கைதுசெய்யும் அபாயம் சூழ்ந்­தி­ருக்­கி­றது.

சி.பி.ஐ. தாக்கல் செய்த 2 ஜி வழக்கில் சாட்சி சொல்ல தனது உடல் நிலையை காரணம் காட்டி டெல்லி செல்­லாமல் தவிர்த்தார் தயாளு அம்மாள். ஆனால், அதே அணு­கு­முறை ஈ.டி. வழக்கில் கை கொடுப்­பது சிரமம் என்­கி­றார்கள். ஏனென்றால் அண்­மைக்­கா­ல­மாக தயாளு அம்மாள் உற்­சா­க­மாக நட­மா­டிய பல காட்­சிகள் மீடி­யாக்­களில் வந்­து­விட்­டன.

வீட்­டுக்கு வரும் வேட்­பா­ளர்கள், மாவட்ட செய­லா­ளர்கள் ஆகி­யோ­ரிடம் அக்­க­றை­யாக வெற்றி வாய்ப்பு குறித்து விசா­ரிக்கும் அள­வுக்குத் தெளி­வா­கவே இருந்­தாராம். ஏப்ரல் 24 ஆம் திகதி கோபா­ல­புரம் வாக்­குச்­சா­வ­டிக்கு நேரில் சென்று தனி­யா­கவே வாக்­க­ளித்­தி­ருக்­கின்றார்.

நாளை மறு­தினம் 26 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இந்த வழக்கில் சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரையும் நேரில் ஆஜ­ரா­கும்­படி டெல்லி தனி நீதி­மன்ற நீதி­பதி ஓ.பி.சைனி உத்­த­ர­விட்­டி­ருக்­கிறார். இதில் தயாளு அம்மாள், கனி­மொழி, ஆ.ராசா ஆகியோர் அன்­றைய தினம் ஆஜ­ராக வேண்டும். ஆனால் தயாளு அம்­மாளோ இதி­லி­ருந்து தப்­பிக்க 18 ஆம் திக­தியே திடீர் உடல் நலக்­கு­றைவை காரணம் காட்டி வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டு­விட்டார்.

ஊழல் வழக்­கு­களில் உச்ச நீதி­மன்றம் கறா­ராக இருப்­பது ஊர­றிந்த விஷயம். இந்த வழக்கின் நீதி­ப­தி­யான சைனி குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அடிப்­படை முகாந்திரம் இருப்பதாகக் கூறியுள்ளார். ஆகவே, முன்ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை. என்கிறார்கள். வழக்கறிஞர்கள். ஒரு வேளை தயாளு அம்மாள் கைதுசெய்யப்பட்டாலும் உரிய பாதுகாப்புடன் மருத்துவமனையில் வைத்திருக்க வாய்ப்புண்டாம். நிஜமாகவே கோபாலபுரம் மிரண்டு போயிருக்கிறது!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல