சனி, 24 மே, 2014

பலிக்­குமா மோடியின் ராஜ­தந்­திரம்?

டில்­லியில் நரேந்­திர மோடி ­பி­ர­த­ம­ராகப் பத­வி­யேற்கும் விழா, மிகப்­பெ­ரிய எதிர்­பார்ப்­பையும், விவா­தத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சாதா­ர­ண­மாக பிர­தமர் மற்றும் அர­சியல் சட்ட அமைப்­பு­களின் உயர் தலை­வர்­க­ளது பத­வி­யேற்பு நிகழ்வு, ஜனா­தி­பதி மாளி­கையில் அசோகா அரங்­கத்­தில்தான் நடை­பெ­று­வது வழக்கம். ஆனால், இம்­முறை வழக்­கத்­துக்கு மாறாக, ஜனா­தி­பதி மாளி­கையில் திறந்­த­வெளி முற்­றத்தில் முன்பு வாஜ்பாய் பத­வி­யேற்­றத்தைப் போன்று, நடை­பெறும் என்று தெரி­கி­றது.



இந்­நி­லையில், நரேந்­திர மோடி தனது பத­வி­யேற்கும் விழா­வுக்கு தெற்­கா­சிய நாடு­களின் கூட்­ட­மைப்­பான `சார்க்' நாடு­களின் தலை­வர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார்.

இது, தற்­போது பல்­வேறு விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேலும், "நரேந்­திர மோடி தனது பிர­சா­ரத்­திலும் பேட்­டி­க­ளிலும் மிகவும் கடு­மை­யாக விமர்­சனம் செய்­தது பாகிஸ்­தா­னைத்தான். அப்­ப­டி­யி­ருக்­கையில், தனது பத­வி­யேற்பு விழா­வுக்கு பாகிஸ்தான் பிர­த­ம­ரையும் அவர் அழைத்­துள்ளார். இதனால், பெரும் சர்ச்­சை­களும் ஏற்­பட்­டுள்­ளன.

தனது பத­வி­யேற்பு விழா­வுக்கு அழைப்­பதன் மூலம் இலங்கை ஜனா­தி­ப­திக்கு கௌர­வத்தை ஏற்­ப­டுத்­து­கிறார் நரேந்­தி­ர­மோடி என்று தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தாவும், வைகோவும் கரு­து­கி­றார்கள் என்றால், பாகிஸ்­தானும், வங்­க­தே­சமும் இதை வித்­தி­யா­ச­மாகப் பார்க்­கின்­றன.

``மக்­க­ளாட்சி சிந்­தனை மேம்­பட்­டு­விட்ட சூழலில், தெரிவு செய்­யப்­பட்ட எந்த அரசும் தனது பத­வி­யேற்­புக்கு அயல் நாட்டு தலை­வர்­களை அழைப்­பதோ, அவர்கள் கலந்து கொள்­வதோ வழக்­க­மில்லை. மாறாக, மன்­ன­ராட்­சி­யிலே மன்­னரின் முடி­சூட்டு விழா­விற்கு ஏனைய மன்­னர்­க­ளுக்கு அழைப்பு விடுப்­பது வழக்கம்'' என்­பது அந்த நாடு­களின் கருத்து.

மொக­லாய சாம்­ராஜ்யம் இருந்­த­போது, ஜஹாங்கீர், ஷாஜஹான், ஓள­ரங்­கசீப் தொடங்கி மொக­லாயச் சக்­க­ர­வர்த்­தி­களின் முடி­சூட்டு விழா­வுக்கு அவர்­க­ளுக்குக் கப்பம் செலுத்தும் நவா­பு­க­ளுக்கும் ராஜாக்­க­ளுக்கும் அழைப்பு விடுப்­பது வழக்­க­மாக இருந்­தது. அது­போன்ற நடை­மு­றையைக் கையாள்­கிறார் நரேந்­திர மோடி.

தெற்கு ஆசி­யாவில் இந்­தி­யாவின் மேலா­திக்­கத்தை மறை­மு­க­மாக வெளிப்­ப­டுத்தும் விதத்தில் பாகிஸ்தான், வங்­க­தேசம், இலங்கை உள்­ளிட்ட இந்­தி­யாவின் அயல் நாடு­க­ளான `சார்க்' நாட்டு தலை­வர்­க­ளுக்கு நரேந்­தி­ர­மோடி, தனது பத­வி­யேற்பு விழா­வுக்கு அழைப்பு விடுத்­தி­ருப்­ப­தா­கத்தான் பாகிஸ்­தானும், வங்­க­தே­சமும் கரு­து­கின்­றன.

அத­னால்தான், அந்த இரண்டு நாடு­களின் தலை­வர்­களும் விழாவில் கலந்து கொள்­ளாமல் அதி­கா­ரி­களை அனுப்­பு­கி­றார்கள். இந்­நி­லையில், `இவ்­வி­ழாவில் ஜனா­தி­பதி மஹிந்த கலந்து கொள்ள இசைவு தந்­தி­ருப்­பதே, இலங்கை இந்­தி­யாவின் மேலா­திக்­கத்தை ஏற்­றுக்­கொள்­கி­றது என்­பதன் வெளிப்­பா­டுதான்' என்று வர்­ணிக்­கின்­றன பாகிஸ்­தா­னியப் பத்­தி­ரி­கைகள் சில.

உண்­மை­யி­லேயே, மோடிக்கு வெளி­நாட்டுத் தலை­வர்­களை பத­வி­யேற்பு விழா­வுக்கு அழைக்க வேண்டும் என்­கிற எண்ணம் இருந்­தி­ருந்தால் அவர், உலக நாடு­களின் தலை­வர்­களை அழைத்­தி­ருப்பார். மாறாக, தெற்­கா­சி­யாவில் இந்­தி­யாவின் மேலா­திக்­கத்தை நிலை­நி­றுத்த வேண்டும் என்­ப­தால்தான் `சார்க்' நாடு­களின் தலை­வர்­களை மட்டும் அவர் அழைத்­தி­ருக்­கிறார் என்று குற்­றஞ்­சாட்­டு­கி­றார்கள் பாகிஸ்தான் அர­சியல் விமர்­ச­கர்கள்.

நரேந்­தி­ர­மோ­டியின் தரப்­பி­லி­ருந்து இது­பற்றி எந்­த­வித விளக்­கமோ, அறி­விப்போ இல்லை என்­றாலும், பா.ஜ.க. தரப்பில் தெரி­விக்­கப்­படும் கருத்து இதுதான்:

``நாம் இலங்­கையைப் புறக்­க­ணிப்­ப­தாலோ, ஜனா­தி­பதி மஹிந்­த­வுடன் எவ்­விதத் தொடர்பும் இல்­லாமல் இருப்­ப­தாலோ யாருக்­கென்ன இலாபம்? இலங்கை மீது போர் தொடுக்­கவா போகிறோம்?

நரேந்­திர மோடியின் வெற்றி, ஜனா­தி­பதி மஹிந்­தவை பய­மு­றுத்தி இருப்­ப­தால்தான் அவர் உட­ன­டி­யாக அழைப்­புக்கு இணங்கி பதவியேற்புக்கு ஓடி வருகிறார். இதனைப் பயன்படுத்தி நமது மீனவர்களின் பிரச்சினையிலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் அவர்களது உரிமையைப்பெறுவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அவரை புறக்கணிப்பது அல்ல' என்கிறார்கள் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள்.

இந்நிலையில், மோடியின் ராஜதந்திரம் பலிக்குமா? இல்லையா? என்பது ஜனாதிபதி மஹிந்தவின் வருகையைப் பொறுத்துத்தான் அமையும் என்கிறார்கள் விமர்சகர்கள்...

 [ நன்றி: தினமணி ]
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல