சனி, 24 மே, 2014

நெடியவனை கையளிக்க கோரி நோர்வேக்கு அழுத்தம்!

ஒஸ்லோவை தளமாக கொண்டு செயற்படுகின்ற புலித் தலைவர் நெடியவனை உடனடியாக கையளிக்க வேண்டும் என்று கடிதம் மூலம் நோர்வையை கோரி உள்ளது ஜாதிக ஹெல உறுமய கட்சி.



இலங்கைக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளை பேரின்பநாயகம் சிவபரன் என்கிற நெடியவன் மேற்கொள்கொண்டு வருகின்றார் என்று நோர்வே தூதுவருக்கு சுட்டிக் காட்டி உள்ள இக்கட்சி உள்நாட்டில் இடம்பெற்று வருகின்ற வழக்குகளுக்காக நெடியவனை கையளிக்க கோரி உள்ளது.

புலிகளின் உயர் மட்ட இராணுவ தலைவர்களில் ஒருவரான நெடியவன் ஒஸ்லோவில் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றார், இவருக்கு எதிராக இன்ரபோல் பிடியாணை உள்ளது, இவர் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க முயல்வது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தத்துவாசிரியர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டி உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல