“அநேகமான இராணுவ அதிகாரிகள் குமாரை விரும்பியதுடன் அவர்மீது அனுதாபமும் காட்டினார்கள். அவரை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக இராணுவம் அவரை கந்தளாயில் உள்ள உத்தியோகத்தர்கள் விடுதியில் விட்டிருந்தார்கள். மூத்த அதிகாரிகளுக்கு ஒரு தனிப்பட்ட உதவியாளனைப் போல அவர் பணியாற்றினார். கைது செய்யப்பட்ட ஜேவிபி சந்தேக நபர்களை எவ்வாறு கையாள்வது என்று இராணுவ உத்தயோகத்தர்களுக்கு குமார் ஆலோசனை வழங்கினார். இராணுவத்தினருடன் ஒரு பரஸ்பர ஒத்துழைப்பு உறவையும் கூட அவர் ஏற்படுத்திக் கொண்டார். மார்ச் 1990ல் இந்திய இராணுவம் சென்றதின் பின்னர் ஜூன் 1990ல் எல்.ரீ.ரீ.ஈ உடன் போர் வெடித்தது.
ஆகவே கெமுனு என்கிற குமார் குணரட்;னம் மூத்த ஜேவிபி தலைவர்களால் கடிந்து கொள்ளப் பட்டதுடன், தங்களுடன் தொடர்பு கொள்ளும் இந்திய ராஜதந்திரிகளிடம் இந்த தலைவர்கள் நடத்தப்பட்ட தாக்குதல்கள், குறிப்பாக 14 இந்திய துருப்புகள் கொல்லப்பட்ட சம்பவம் என்பனவற்றுக்காக தங்கள் மன்னிப்பை கேட்டுக் கொண்டார்கள். பிரான்சுக்கான முன்னாள் ஸ்ரீலங்கா தூதுவர் கலாநிதி. தயான் ஜயதிலகா, சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா ஊடகமொன்றில் தான் எழுதிய கட்டுரையில் இந்தச் சம்பவம் பற்றிச் சொல்லியிருந்தார்.
“குமார் குணரட்னமின் மூத்த சகோதரரான ரஞ்சிதன் (இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது) நான் எங்குமே சந்தித்திராத மிகச் சிறந்த புத்திசாலிகளில் ஒருவர், இயலுமையும் மற்றும் ஒழுக்கமும் உள்ளவர். இருவரையும் ஒப்பிடுகையில் குமாரிடம் மூளையை விட துணிச்சலே அதிகம் உள்ளதாகத் தோன்றுகிறது, ஆனால் அந்த துணிச்சல் அளவுக்குமீறி இருந்தது. அதேவேளை ஜேவிபி அங்கத்தவர்கள் இந்திய அமைதி காக்கும் படைக்கு (ஐ.பி.கே.எப்) எதிரான தேசப்பற்றுள்ள யுத்தம் என்கிற பெயரால் சிங்கள இடதுசாரிகள் மற்றும் சிறிய அரச ஊழியர்கள் ஆகியோரை மும்முரமாக கொலை செய்துவந்தபோது, குமார உண்மையான விசுவாசியாகத் திகழ்ந்தார், உண்மையில் அவர் திட்டமிட்டு ஐ.பி.கே.எப் பிற்கு எதிரான ஒரு கண்ணிவெடித் தாக்குதலில் சாத்தியமான வழியில் பங்கேற்றார். அடுத்த நாள் காலை, ஜேவிபி தலைமை இந்திய உதவி தூதுரைச் சந்தித்து கெஞ்சி மன்னிப்புக் கோரியதுடன் இது திரும்பவும் நடக்காது என வாக்குறுதியும் அளித்தது”
அவமதிப்பான முடிவு
ஜேவிபியினது இரண்டாவது எழுச்சி 1989;ஃ90 களில் ஒரு அவமதிப்பான முடிவுக்கு ஆளாகியது. விஜேவீர மற்றும் கமநாயக்கா ஆகியோர் கொல்லப்பட்டதுடன் எஞ்சியிருந்த ஜேவிபி அங்கத்தவர்கள் இந்தியாவுக்கு தப்பியோட ஆரம்பித்தார்கள். மற்றொரு சாணக்கியமிக்க இராஜதந்திர நடவடிக்கையாக இந்திய அதிகாரிகள் அவர்களது பயணத்துக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். சிறி ஐயா எனப்படும் சோமவன்ச அமரசிங்க ஐரோப்பாவை அடைவதற்கு இந்திய தொடர்பை பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கெமுனு என்கிற பிரேமகுமாரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். அத்துடன் திருகோணமலையில் இந்திய இராணுவத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளும் முடிவு பெற்றன. இது ஒரு குறுகிய கால நடவடிக்கையாக இருந்தபோதிலும் கெமுனுவின் இராணுவ வெற்றிகளைப் பற்றிய கதை உயிர் பிழைத்த ஜேவிபி அங்கத்தவர்கள் மற்றும் அனுதாபிகள் மத்தியில் பரவத் தொடங்கியது.
எஞ்சியிருந்த ஜேவிபி எச்சங்களிடையே பிரேமகுமார் ஒரு ஹீரோ அந்தஸ்தை பெற்றார். பின்னாளில் ஜேவிபியினரிடையே ஒரு புதிய அந்தஸ்தை அடைவதற்கு இது அவருக்கு உதவியது. ஜேவிபி அங்கத்தவர்களிடையேயான குமார் மாத்தையாவின் வழிபாட்டு வடிவம் மற்றம் ஹீரோ அந்தஸ்து என்பனவும் மற்றும் அவரது நிறுவன ரீதியான திறமை மற்றும் தந்திரோபாய திறன் என்பன அவரது அரசியல் எதிரிகளின் கண்ணளில் அவர்மீது அச்சத்துடன் கூடிய விரோதத்தை தோற்றுவித்தது. ஒரு இராணுவ களத் தளபதியாக பணியாற்றிய அவரது அனுபவம் சாத்தியமான அச்சுறுத்தலையும் விளைவித்தது.
“அவர் ஒரு குறிப்பிட்ட முடிவுகளுக்கு வந்ததுடன் மற்றும் ஜேவிபியினது அடிமட்டத் தொண்டர்களை தன்னுடன் ஒத்துழைப்பதற்கு இணங்க வைக்கவும் அவரால் முடிந்தது. முன்னணி சோஷலிசக் கட்சியின் முன்னோடியான“ ஜன அரகள வியாபாரய”(மக்கள் போராட்ட இயக்கம்) வை அணி திரட்டுவதில் அவர் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தார்”.
ஜேவிபி யினை மீள் கட்டமைப்பு செய்து அதற்கு புத்துயிர் அளிப்பதற்காக குமார் குணரட்னம் தனது நேரம் மற்றும் சக்தி என்பனவற்றை சேனதீர மற்றும் நந்தன ஆகிய இரண்டு குணதிலகாக்களுடன் சேர்ந்து அர்ப்பணம் செய்தார். சோமவன்ஸ அமரசிங்கவை காட்டிலும் கனிஷ்;ட நிலையில் அவர் இருந்த போதிலும் குமார்ஃகுமார் மாத்தையா அல்லது குமாரஃ குமார மாத்தையா என இப்போது குறிப்பிடப்படும் பிரேமகுமார் 90 களில் இருந்த புதிய ஜேவிபியில் ஆதிக்கம் நிறைந்த ஒரு தலைவராக மாறியிருந்தார். இயக்கத்துக்கு வெளியே அவரைப்பற்றி சிறிதளவே தெரிந்த போதிலும், விமல் வீரவன்ஸவைப் போன்றவர்களைப்போல வெளியே தெரியவேண்டும் என்பதற்காக போலிப் பகட்டினை வெளிப்படுத்தாமல், தன்னைப் பற்றிய ஒரு குறுகிய சுய விபரத்தை மட்டும் வெளியே காட்டி திரைமறைவில் அடக்கமாக செயல்பட்டு வந்தார்.
திருகோணமலையில் கெமுனு என்கிற பிரேமகுமார் தலைமையேற்று நடத்திய ஜேவிபி இராணுவ நடவடிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க அம்சம் அது பயங்கரவாத தன்மை அற்றதாக இருந்ததுதான். அந்தத் தாக்குதல் கெரில்லா தாக்குதல் வகையானதும் மற்றும் இராணுவ இலக்குகளின் மீதானதுமாக இருந்தது. தெற்கில் ஜேவிபி திரளான அளவில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு அதனூடாக அரசியல்வாதிகள், நிருவாக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் குடும்பத்தவர்கள் உட்பட பொதுமக்களை படுகொலை செய்தபோதும், திருகோணமலையில் இந்திய இராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பயங்கரவாத நடவடிக்கைகளாக வகைப்படுத்த முடியாது.
இந்திய இராணுவத்தின் காலத்திலும் மற்றும் அதே போல அதை வழி நkumar gunaratnam-6டத்திய சில சம்பவங்களிலும் கெமுனுவைப் பற்றி சிறிதளவே அறியப்பட்ட பங்களிப்பு தொடர்பில் நான் இப்போது கவனம் செலுத்த விரும்புகிறேன். இதன் நோக்கம் கெமுனுவை ஒரு ஹீரோவாக காட்டுவதல்ல ஆனால் பெருமளவு அறியப்படாத ஜேவிபியின் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்துடன் இந்தக் கதையை தொடர்பு படுத்துவதற்கு வேண்டி. அந்த நாளைய வெகுஜன ஊடகங்கள் இந்தக் கட்டத்தை பிரசுரிக்காமல் போனாலும், இது தொடர்பான புத்தகங்கள், குறிப்புகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் போன்ற முக்கிய பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் தலையாயதாகக் காணப்படும் நூல்கள், “ஸ்ரீலங்கா: ஒரு காணாமற்போன புரட்சி(ஜேவிபியின் உள்ளகக் கதை)” மற்றும் பேராசிரியர் றோகான் குணரட்னவின் “ஸ்ரீலங்காவில் இந்தியாவின் தலையீடு” ஆகியனவாகும். மேலும் நானும் இது தொடர்பான அறிவுள்ள ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக முன்னாள் ஜேவிபி அங்கத்தவர்களை, குமார் குணரட்னம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக தொடர்பு கொண்டேன்.
கேகாலை மாவட்டம்
குணரட்னம் சகோதரர்கள் கலப்பின பெற்றோர்களாக, தமிழரான தகப்பனையும் சிங்கள மற்றும் தமிழ் கலப்பான தாயையும்; கொண்டவர்கள். அவர்களது இளைய சகோதரி நிரஞ்சனா. அந்தக் குடும்பம் கேகாலை மாவட்டத்தில் உள்ள அங்குறவெலவில் வாழ்ந்தது, அங்கு அவர்களின் தாயார் கோகாலை சென்ட் மேரீஸ் கல்லூரியில் 34 வருடங்களாக கல்வி போதித்து வந்துள்ளார். அந்த மூன்று பிள்ளைகளும் சிங்கள மொழி மூலம் கல்வி கற்றுவந்ததுடன் சிங்களத்தில் புலமையும் பெற்றிருந்தார்கள். அவர்களால் தமிழில் பேசவும் பேசுவதை விளங்கிக் கொள்ளவும் முடிந்தாலும் தமிழில் எழுதவோ வாசிக்கவோ இயலாது. இரண்டு சகோதரர்களும் வௌ;வேறு வருடங்களில் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட கற்கைநெறிக்கு தெரிவானவர்கள். இருவருமே ஜேவிபி அரசியலில் மூழ்கியதன் விளைவாக வௌ;வெறு சமயங்களில் பல்கலைக்கழக படிப்பைக் கைவிட்டவர்கள்.
பின்னாளில் ரஞ்சிதன், ஜேவிபி ஆதரவு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளராக பணியாற்றினார். அவர் அனைவராலும் பெரிதும் விரும்பப் பட்டவராகவும் மற்றும் மதிக்கப்பட்டவராகவும் இருந்தார். ரஞ்சிதன், 21 அங்கத்தவர்களைக் கொண்ட ஜேவிபியின் மத்திய குழுவில் அங்கத்தவராகவும் பின்னர் 7 அங்கத்தவர்களைக் கொண்ட அரசியற் குழுவில் அங்கத்தவராகவும் இருந்தார். அவர் ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவின் தனிப்பட்ட பிரியத்துக்;குரியவராக இருந்தார். குருநாகல் மாவட்டத்தின் ஜேவிபியின் மாவட்ட செயலாளராகவும் ரஞ்சிதன் பணியாற்றியுள்ளார். ஒரு சமயம் ஜேவிபியின் உயர்மட்டத்தினால் பல்லின மக்கள் வாழும் திருகோணமலை மாவட்டத்துக்கு ரஞ்சிதன் அனுப்பப்பட்டார். அவர் ஜேவிபியின் திருகோணமலை மாவட்ட குழு ஒன்றை அமைத்தார், இந்திய இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்து இருந்த சமயத்தில்கூட அது அங்கு இயங்கியது.
ஜனவரி 1990ல் ரஞ்சிதன் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டிருந்த வேளை சித்திரவதைகள் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய ஒரு ஒட்டுண்ணிக் குழுவின் மரணப் படையால் மரணதண்டனைப் பாணியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மறைவாக அகற்றப்பட்டது. ரஞ்சிதன் குணரட்னம் இன்னமும் காணாமற் போனவராகவே வகைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் 1960ல் பிறந்தவர் அவர் மரணமடையும்போது அவருக்கு வயது 30.
ரஞ்சிதனின் தம்பி பிரேமகுமார் 1965 நவம்பர் 18ல் பிறந்தவர். அவர் கேகாலை சென்ட் மேரீஸ் கல்லூரியில் 1971 ஜனவரி 2 முதல் 1980 டிசம்பர் 3 வரை கல்வி கற்றுள்ளார். பின்னர் அவர் தனது கல்வியை 1981 ஜூன் 15 முதல் 1985 மார்ச் 22 வரை பின்னவெல மத்திய மகா வித்தியாலயத்தில் தொடாந்தார். அவர் 1981ல் தனது 15ம் வயதில் இருந்தே ஜேவிபியுடன் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர்பு கொண்டிருந்தார். இந்த விடயத்தில் அவரது மூத்த சகோதரர் அவரை ஊக்குவிக்கவில்லை.
பொதுவாக குமார அல்லது குமார் என அழைக்கப்படும் பிரேமகுமார் 1985ல் பேராதனைப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவானார். அவர் மாணவர் அடையாள அட்டை இல. ஈஃ85ஃ58 ன் கீழ் பொறியியல் பீடத்தில் சேர்கக்கப்பட்டார். அவரது தேசிய அடையாள அட்டை இலக்கம், 653231890எ என்பதாகும். அவர் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்தபோது ஜேவிபி ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா, ஜூலை 1983 தமிழர் எதிர்ப்பு கலவரத்தை அடுத்து சிறில்மத்தியு போன்ற ஐதேக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இடதுசாரி கட்சிகளை தடை செய்திருந்தார்.
பிரபலமான நபர்
1981 முதலே குமார் ஜேவிபியுடன் தொடர்பு கொண்டிருந்த அதேவேளை, அவர் பேராதெனியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த பின்னர் 1985ம் ஆண்டிலேயே அந்த அமைப்பில் முறைப்படி இணைந்தார். அதற்கான காரணம் அவரது சகோதரர் ரஞ்சிதன் தனது இளைய சகோதரன் அரசியலில் ஈடுபடுவதற்கு சாதகமாக இருக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. தனது தம்பி தன்னைப்போல உயர்கல்வியை குழப்பாமல் ஆகக் குறைந்தது பட்டப்படிப்பை பூர்த்தி செய்து ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் பிரேமகுமார் சனது சக பட்டதாரி மாணவரான சிசிர குமார் தேவப்பிரியவின் பரிந்துரையுடன் முன்சென்று ஜேவிபியில் இணைந்து கொண்டார். அரம்பத்தில் அவர் பல்கலைக்கழக மாணவர் செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் ஜேவிபியின் கட்டுப்பாட்டிலுள்ள மாணவர் சங்கங்களில் பதவியும் வகித்தார். அவர் ஒரு பிரபலமான நபராக குறிப்பாக பெண்கள் மத்தியில் திகழ்ந்தார். அவருடைய சமகாலத்தவர்கள் சொல்வது அவர் ஒரு சில பெண்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தாலும் இறுதியில் பல்கலைக்கழகத்தில் அவர் சந்தித்த ஒரு மருத்துவ பட்டதாரி மாணவியையே தனது மனைவியாக ஆக்கிக் கொண்டார் என்று.
கேகாலையை சேர்ந்த அந்த இளைஞர் ஆழமான சிந்தனையாளர், தந்திரசாலி, மற்றும் நடைமுறைக்கு ஏற்ற செயற்பாட்டாளர். அரச அடக்கு முறைகளை எதிர்கொண்டதால் ஜேவிபி மெதுவாக திருப்பித் தாக்கவும் எதிர்த் தாக்குதலை மேற்கொள்ளவும் ஆரம்பித்தது. கட்சியை இரகசியமாக நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதற்கு அவசரமாக பணமும் ஆயுதங்களும் தேவைப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் குமார் குணரட்னம் தனது நெருப்பு ஞ}னஸ்தானத்தை பெற்றுக் கொண்டார். சுவராஸ்யமானவகையில் அது 1987 சிங்கள தமிழ் புதுவருட தின சுப நேரமாக இருந்தது.
பிரதானமாக பல்கலைக்கழகத்தில் பயிலும் பட்டதாரி மாணவர்களை அல்லது முன்னாள் பட்டதாரி மாணவர்களைக் கொண்ட ஒரு இளம் ஜேவிபி குழுவொன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் மார்ஸ் மண்டப வளாகத்துள் இரகசியமாகக் கூடினார்கள். அது 1987 ஏப்ரல் 14ந்திகதி இரவு. ஜேவிபியின் மூத்த தலைவர்கள் செயற்படுத்த வேண்டிய திட்டத்தை அவர்களுக்குச் சொன்னார்கள். ஒரு முன்னாள் இராணுவ வீரர் பல்லேகல இராணுவ முகாமின் வரைபடத்துடன் விபரங்களை சுருக்கமாக விளக்கினார். இரவு 2மணிக்கு ஜேவிபி குழு ஒரு வானில் ஏற்றிச் செல்லப்பட்டது. அந்த அங்கத்தவர்கள் இராணுவ சீருடை தரித்திருந்தார்கள். இரண்டு பெண்களை உள்ளடக்கிய அந்தக் குழுவுக்கு குமார களத் தளபதியாக நியமிக்கப் பட்டிருந்தார். அவர்களிடம் ஒரு துப்பாக்கி மட்டுமே இருந்தது மற்றும் பல்வேறு அளவுகளிலுள்ள பல கத்திகள் மற்றும் வெடிமருந்து என்பன இருந்தன.
காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளில் உள்ள கீழ்மட்ட ஆட்கள் அப்போது ஜேவிபியினுள் ஊடுருவ தொடங்கியிருந்தார்கள், அதனால் முகாமுக்கு உள்ளே இருந்த ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தார் இந்த உதவி காரணமாக ஜேவிபி அணி பல்லேகல முகாமின் கவனக்குறைவாக இருந்த ஒரு பக்க வழியாக உள்ளே நுழைந்து விட்டது. வியப்பில் மூழ்கிய காவலாளிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவரப் பட்டார்கள். கைப்பற்றக்கூடிய அளவு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கணிசமானளவு அள்ளிக்கொண்ட ஜேவிபி ஆற்றுப்பாதை வழியாகத் தப்பிச் சென்றது.
பல்லேகல முகாம் திடீர் தாக்குதலுக்கு உள்ளானதில் நாடே அதிர்ச்சியடைந்தது. அதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்வதற்காக தீவிர மனித வேட்டை ஆரம்பிக்கப் பட்டது. குமார் உட்பட அதில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் தலைமறைவானார்கள். ஆனால் ஆறு வாரங்களுக்குள் 1987 மே 23ல் கலகெதரவில் வைத்து குமார் கைது செய்யப்பட்டார். அவர் கலகெதர காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் கண்டிகாவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
“றாகம சோமே”
குமார் குணரட்னம் பின்னர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு மகசின் சிறைச்சாலையில் ராட்சச பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் கைதி இல. டி.3301 ஆகத் தடுத்து வைக்கப்பட்டார். அவருடன் சேர்த்து மற்றும் ஏழு பேர்கள் (சந்திரசிறி, சமரநாயக்க, டி கொஸ்தா, ஜயந்த, லக்;ஸ்மன், சிசிர, மற்றும் றஞ்சித் ஆகியோர்) 1988ல் கொழும்பு உயர் நீதி மன்றினால் பல்லேகல ஆயதக் கொள்ளைக்காக (வழக்கு எண்: 3591ஃ88) தண்டிக்கப்பட்டார்கள். மகசின் சிறைச்சாலையில் இருந்த வேளையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஜேவிபி உறுப்பினர்களுக்கு குமார் அரசியல் வகுப்புகளை நடத்தி வந்தார். இதன் காரணமாக அவர் கண்டியிலுள்ள போகம்பரை சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கே போகம்பரை சிறையில் அவரும் அங்கிருந்த மற்றொரு மத்திய குழு உறுப்பினரான றாகம சோமே என்கிற மற்றொரு ஜேவிபி உறுப்ப ஜேவிபினரும் சேர்ந்து அங்கிருந்து தப்பிப்பதற்காக ஒரு திட்டம் வகுத்தார்கள். இதில் இரகசிய சுரங்கப்பாதை ஒன்று தோண்டுவதும் உட்பட்டிருந்தது. 1988 டிசம்பர் 13ல் அவர்கள் தங்கள் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்து போகம்பரயில் இருந்து தப்பித்தார்கள். இதன் விளைவாக குமாரின் கைதுக்காக திறந்த பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
சிறையில் இருந்து தப்பித்ததும் குமார் ஜேவிபி உயர்மட்டத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். அவர் சிறையில் இருந்த வேளையில்தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதும் மற்றும் இந்திய இராணுவம் வடக்;கு மற்றும் கிழக்கினை ஆக்கிரமித்ததும் நடைபெற்றது. இந்திய இராணுவம் மற்றும் புலிகள் இடையே யுத்தமும் வெடித்தது. தெற்கில் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக, தடை செய்யப்பட்டிருந்த ஜேவிபி ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்ததுடன் வன்முறையை கட்டவிழ்த்தும் விட்டது. இந்த மாற்றமான சூழ்நிலையில் ஜேவிபி தலைவர்களால் குமாருக்கு புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. ஜேவிபியின் திருகோணமலை மாவட்டக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டு மத்திய குழு உறப்பினராகவும் உயர்த்தப்பட்டார். அவர் தனது இயக்கப் பெயராக கெமுனு என்பதை பெற்றுக் கொண்டதுடன் தேசப் பிரேமி ஜனதா வியாபாரய என்கிற பெயரின் கீழ் இந்தியப் படைகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அவருக்கு கட்டளைகளும் பிறப்பிக்கப்பட்டன. இப்படித்தான் ரஞ்சிதனின் இளைய சகோதரர் திருகோணமலையில் மூத்த சகோதரனான ரஞ்சிதனால் உருவாக்கப்பட்ட மாவட்டக் குழுவைக் கைப்பற்றினார்.
இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் ஜேவிபி இயங்கிய ஒரே மாவட்டம் திருகோணமலை மட்டுமே. குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் 15 இலிருந்து 20 வரையான அங்கத்தவர்கள் இருந்தார்கள். கெமுனு என்கிற குமார் உடனடியாக குழுவின் செயலாளராக ஆக்கப்பட்டு முழப் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கெமுனு, டீ சேரம், சனத், அர்ஜூன மற்றும் பின்தெனிய ஆகிய 5 பேர் மாவட்டக் குழுவில் அங்கம் வகித்தார்கள்.
திருகோணமலையிலிருந்த ஜேவிபிக்கு சாதகமாக இருந்த அம்சங்களில் ஒன்று, 1987ல் கல்லாறில் இருந்த இராணுவ முகாமில் இருந்து அது கைவசப்படுத்திய ஆயுதங்கள் தற்போது அதனிடம் இருப்பதுதான். வடக்கு மற்றும் கிழக்கை படிப்படியாக கையகப்படுத்தி வந்த இந்திய இராணுவத்தின் மீது ஆத்திரம் கொண்டிருந்த ஆயுதப் படைகளின் சில பிரிவினர்கள் ஜேவிபியுடன் இணைய ஆரம்பித்தார்கள். கல்லாறில் அமைக்கப்பட்டிருந்த ஆயுதப்படைகளின் அரண் குறைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, சில வீரர்கள் ஜேவிபியுடன் சேர்ந்து சதி செய்து ஒரு ஆயுதக் கொள்ளையை அரங்கேற்றினார்கள்.
டி.பி.எஸ்.ஜெயராஜ்
தொடரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக