செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

பிரசவவலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு காரை செலுத்திச் சென்ற கர்ப்பிணிப் பெண் நெடுஞ்சாலையில் குழந்தைப் பிரசவம்

பிர­சவவலி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து தானே காரை செலுத்திச் சென்ற கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர் நெடுஞ்­சா­லை­யோ­ரத்தில் ஆரோக்­கி­ய­மான ஆண் குழந்­தையைப் பிர­ச­வித்த சம்­பவம் அமெ­ரிக்க உதாஹ் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.



டேவி மரியஹ் ஒஸ்ட்லர் என்ற மேற்­படி பெண் (32 வயது) தனக்கு பிர­சவவலி ஏற்­பட்­டதும் தனது காரில் ஏறி தானே மருத்­து­வ­ம­னைக்கு செல்ல முயற்­சித்­துள்ளார்.

உதாஹ் நெடுஞ்­சா­லையில் கார் பய­ணித்த வேளை அவ­ருக்கு பிரசவவலி தீவிரம் அடை­யவும் காரை ஓர­மாக நிறுத்தி விட்டு அவ­சரசேவைப் ­பி­ரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

இந்­நி­லையில் சம்­பவ இடத்­திற்கு வந்த அவ­சரசேவைப் பிரி­வினர் டேவியை காரி­லி­ருந்து வெளியில் தூக்­கி­யெ­டுத்து அவ­ருக்கு குழந்­தையை பிர­ச­விக்க உத­வினர்.

இத­னை­ய­டுத்து டேவியும் அவ­ரது குழந்­தையும் பிறிஹாம் நக­ரி­லுள்ள மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டனர்.

தற்போது தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல