செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

கருத்தடை சத்திர சிகிச்சையின் பின்னரும் கருத்தரிக்க் முடியுமா??

குடும்ப கட்­டுப்­பாட்டு முறைகள் பல இருந்­தாலும் நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு முறை­யாக சொல்­லக்­கூ­டி­யது கருத்­தடை சத்­திர சிகிச்­சையே ஆகும். கருத்­தடை சத்­திர சிகிச்சை முறை­யா­னது பெண்­களின் பலோப்­பியன் குழாய்கள் கட்­டுப்­போ­டப்­பட்டு வெட்­டப்­ப­டு­வதன் மூலம் செய்­யப்­ப­டு­கின்­றது. இதனை LRT சத்­திர சிகிச்­சை­யென அழைப்­பார்கள். இவ்­வா­றான நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு முறையின் பின்னர் பெண் ஒருவர் தற்­செ­ய­லாக கூட மீண்டும் கருத்­த­ரிக்க முடி­யுமா? அவ்­வாறு கருத்­த­ரிக்கும் போது கரு­வா­னது கர்ப்­பப்­பை­யினுள் வள­ருமா? அல்­லது கர்ப்­பப்­பைக்கு வெளியே பலோப்­பியன் குழாயில் தங்­குமா என அறிய வேண்டும். இதற்கு விளக்கம் தர நான் அண்­மையில் கண்ட உண்மை சம்­ப­வத்தை தரு­கின்றேன்.



கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் எனது கிளி­னிக்கில் என்­னிடம் ஆலோ­சனை பெற வந்த தம்­ப­தி­களில் பெண்­மணி அதி கூடிய வயிற்று வலியில் இருந்தார். அவர் 34 வய­து­டைய 3 பிள்­ளை­களின் தாய். அவ­ரது 3 பிள்­ளை­களும் சிசே­ரியன் முறை மூலமே பிர­ச­விக்­கப்­பட்­டார்கள். மூன்­றா­வது சிசே­ரியன் பிர­சவ நேரத்தில் நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சை­யான LRT செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறினார்.இவ்­வா­றான LRT குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை இவ­ருக்கு கடைசி சிசே­ரியன் பிர­சவ நேரத்தில் 3 வரு­டங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் ஒரு பிர­பல வைத்­தி­ய­சா­லையில் செய்­யப்­பட்­டுள்­ளது.இம்­முறை இவ்­வாறு வயிற்று வலி வரும் போது அவர் ஏற்­க­னவே இரு இடங்­களில் மருந்­து­களை எடுத்­துள்ளார். இதன்­போது வயிற்று வலிக்கு பல பல கார­ணங்­களை எண்ணி மருந்­துகள் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனாலும் வயிற்று வலியோ குறைந்­த­தாக தெரி­ய­வில்லை. அவ­ரது மாத­விடாய் சக்­க­ரமும் ஒழுங்­கற்­ற­தா­கவே இருந்து வந்­துள்­ளது. அத்­துடன் நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­தி­ர­சி­கிச்சை செய்­துள்­ள­மையால் கருத்­த­ரிக்க வாய்ப்பும் இல்லை. அதனால் ஏற்­படும் சிக்­கல்­க­ளையும் எவரும் எண்­ணி­யி­ருக்­க­வில்லை.

எனினும் வயிற்று வலி ஒரு நடுத்­தர வய­து­டைய பெண்ணில் கடு­மை­யாக வரும் போது நாம் எதற்கும் கருத்­த­ரித்தால் வரக்­கூ­டிய நோய்­க­ளையும் நினைக்­கத்தான் வேண்டும். இதற்­க­மைய இப்­பெண்ணின் சிறு­நீரை பரி­சோ­தித்து பார்த்தால் அதிர்ச்­சி­யான தக­வல்தான் கிடைத்­தது. அதா­வது இப்பெண் கருத்­த­ரித்­துள்­ள­தா­கவே அறிய வந்­தது. இந்த தக­வலை குடும்­பத்­தி­ன­ருக்கு கூறும்­போது கணவர் அதிர்ச்­சி­ய­டைந்தார். எவ்­வாறு ஒரு பெண் நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்த பின்­னரும் கருத்­த­ரிக்க முடியும் என்றே கேட்­டனர். அத்­துடன் நாம் ஸ்கான் பரி­சோ­தனை செய்து வயிற்றில் உள்ள சரி­யான கார­ணத்தை கண்­ட­றிய முயற்­சித்தோம். அதன்­போது தெரிய வந்­தது. அப்பெண் கருத்­த­ரித்­துள்ளார். ஆனால் கரு­வா­னது கர்ப்­பப்­பையில் தங்­காது கர்ப்­பப்­பைக்கு வெளியே பலோப்­பியன் குழா­யினுள் தங்­கி­யுள்­ளது. இவ்­வா­றான நிலை­மைகள் நிரந்­த­ர­மான குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்த பெண்­களில் சிலரில் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. அதா­வது 200 பெண்­களில் நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்தால் அதில் ஒரு­வ­ருக்கு இவ்­வா­றான நிலைமை ஏற்­படும். எனவே, இதனை அந்த குடும்­பத்­தி­ன­ருக்கு விளக்க வேண்டி இருந்­தது.

அடுத்­த­தாக பெண்­களில் ஏற்­படும் இந்த கர்ப்­பப்­பைக்கு வெளி­யி­லான கருத்­தங்­க­லா­னது எந்த அளவு கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது என்று பார்க்க வேண்டும். இந்த பெண்­ணுக்கு இதனை நாம் கண்­ட­றிந்­த­வுடன் அடுத்­த­தாக இந்த கருக்­கட்­டிய பலோப்­பியன் குழாய் வெடித்தால் வயிற்­றினுள் பெண்­ணுக்கு அதி­கூ­டிய இரத்த போக்கு ஏற்­பட்டு ஆபத்­தான நிலை­மைகள் கூட ஏற்­ப­டலாம். ஆகையால் சத்­திர சிகிச்சை செய்து கருத்­தங்­கிய பலோப்­பியன் குழாயை அகற்ற வேண்டும். அத்­துடன் சிலர் கேட்­கத்­தோன்றும் இந்தக் கருவைக் காப்­பாற்றி ஒரு குழந்­தை­யாக பெற்­றெ­டுக்க முடி­யுமா என்று. இதற்கு பதில் என்­ன­வென்றால் இந்த கரு பலோப்­பியன் குழாயில் வளர இட­வ­சதி இல்­லா­ததால் குழா­யுடன் சேர்ந்து வெடித்து தாய்க்கு ஆபத்­தைத்தான் ஏற்­ப­டுத்தும். எனவே இவ்­வா­றான சிக்­கலை தவ­ற­வி­டாமல் சரி­யான நேரத்தில் கண்­ட­றிந்து சரி­யான சத்­திர சிகிச்­சையை உட­ன­டி­யாக செய்­வ­துதான் சிறந்த சிகிச்சை. இவற்­றை­யெல்லாம் நாம் அந்த குடும்­பத்­தி­ன­ருக்கு விளங்க வைத்து உட­ன­டி­யான சத்­திர சிகிச்­சையை திட்­ட­மிட்டோம்.

இந்த சத்­திர சிகிச்சை பெண்ணை முழு­மை­யாக மயக்­கித்தான் செய்­யப்­பட்­டது. இதன்­போது வயிற்றில் ஒரு சிறிய துளை மூலம் லப்­ரஸ்­கோப்பி கம­ராவை செலுத்தி வயிற்­றினுள் உள்ள பாதிக்­கப்­பட்ட வெடிப்­ப­டைந்த பலோப்­பியன் குழாயை கண்­ட­றிந்து அதனை அகற்­றினேன்.

இதன் மூலம் வயிற்­றினுள் ஏற்­பட்ட குருதி இழப்பை கட்­டுப்­ப­டுத்தி பெண்ணை ஆபத்தில் இருந்து காப்­பாற்ற முடிந்­தது. இந்த வகை சத்­திர சிகிச்சை வயிற்றில் ஒரு சிறிய காயத்­துடன் கிட்­டத்­தட்ட 30 நிமி­டங்­க­ளுக்குள் முடித்து விட்டோம். அதனை தொடர்ந்து அப்பெண் முற்று முழு­தாக குண­மாகி மறுநாள் வீடு சென்றார்.

எனவே இதி­லி­ருந்து நாம் அறி­யத்­த­ரு­வது என்­ன­வென்றால் கருத்­தடை சத்­திர சிகிச்சை LRT ஒரு நிரந்­தர குடும்ப கட்­டுப்­பாட்டு முறை. எனினும் ஒரு சிலரில் இம்­மு­றையின் பின்­னரும் கருத்­தங்­கக்­கூ­டி­ய­வா­றான சிறிய சந்தர்ப்பம் ஒன்றுள்ளது. அதிலும் கருவானது பலோப்பியன் குழாயில் தங்கி வெடித்து வயிற்று வலி வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. எனவே இதனை ஞாபகத்தில் வைத்து நடுத்தர வயது பெண்ணொருவரின் வயிற்று வலி சற்று அதிகமாக உள்ளபோது கருத்தங்கல் தொடர்பாகவும் அதன் சிக்கல்கள் தொடர்பாகவும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் போதுதான் பெண்களில் ஏற்படும் மிகவும் ஆபத்தான பலோப்பியன் குழாய் கருத்தங்கலை தவற விடாமல் கண்டறிந்து பெண்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல