சனி, 20 மார்ச், 2010

விண்டோஸ் சிடியின் சீரியல் நம்பரை கண்டுபிடிக்க ஒரு எளியமுறை

உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சிடி ஒரிஜினல் இருக்கிறது அதனுடைய புரோடக்ட் ( சிடி) கீ தொலைந்துவிட்டால் கவலை வேண்டாம். அதை மீட்டெடுக்க பின்வரும் முறையை கையாளவும். அதாவது அந்த விண்டோஸ் சிடியை வேறொரு சிஸ்டத்தின் சிடி ட்ரைவில் போடுங்கள். பிறகு மை கம்ப்யூட்டர் சென்று அங்கு அந்த சிடியை எக்ஸ்ப்ளோரர் வழியாக திறக்கவும். பிறகு அதற்குள் i386 போல்டரினுள் சென்று Unattend.txt என்ற கோப்பினை திறக்கவும் பிறகு அந்த கோப்பின் கீழே கடைசிக்கு செல்லுங்கள் அங்கு அந்த சிடிக்கான கீ இருக்கும் குறித்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்.

11 வயது சிறுவனைக் கொன்று அவனது மூளையை உண்ட நபர்

கொல்லப்பட்ட சிறுவன் Li Xuetang
11 வயது சிறுவன் ஒருவனைக் கொன்று அவனது மூளையை உண்ட ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென் மேற்கு சீனாவில் இடம்பெற்றுள்ளது. யுனான் மாகாணத்திலுள்ள கிஸியன் கிராமத்தைச் சேர்ந்த வாங் சயொக்ஸு (Wang Chaoxu, 29)என்ற மேற்படி நபர், மண்புழுக்களுடன் மனித மூளையை சேர்த்து உண்பதன் மூலம் தனது வலிப்பு நோயை (epilepsy) குணப்படுத்த முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதனின் இளமை எப்போது முடிவு? முதுமை எப்போது ஆரம்பம்?

மனிதனுக்கு 35 வயது முடிவில் இளமைப் பருவம் முடிந்து 36 முதல் நடுத்தர வயது ஆரம்பமாகிறது.

அதே நேரத்தில் 58 வயதில் முதுமை தொடங்குகிறது என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

துணிச்சலான யாழ். மாணவி தனன்சிகாவுக்கு தங்க விருது

தேசிய வீர மாணவர்களுக்கான விருது நிகழ்வு நேற்று கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.நிகழ்வில் மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சின்னராசா தனன்சிகா என்ற தமிழ் மாணவிக்குத் தங்க விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

தனது உயிரை துச்சமென மதித்து உயிராபத்தை எதிர்நோக்கிய மாணவர்களுக்குத் தக்க சமயத்தில் உதவிபுரிந்த மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேசிய வீர மாணவர்களாக கௌரவிக்கப்பட்டு
வருகின்றனர். உக்கிரமாக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், செல்தாக்குதல்களுக்கு மத்தியில், பதுங்கு குழிக்குள் சிக்கிக் கொண்ட (11 வயது) மாணவரை பேராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காகவும், மேலும் சிலரை உயிராபத்திலிருந்து காப்பாற்றியமைக்காகவும் இந்த விருது
மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டது.

கண்டியில் பலரும் பார்த்திருக்க நடந்த பயங்கர படுகொலை!

யுத்தம் ஓய்ந்த கையோடு பெருமளவிலான படுகொலைகள், வன்முறைகள் என்பன முடிவுக்கு வந்துள்ளன. இது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை தோற்றுவித்துள்ளபோதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் வன்முறைகள் படுகொலைகள் மற்றும் வக்கிரத்தனமான போக்குகள் தொடர்ந்தும் அதிர்ச்சி அடைய வைப்பதாகவே இருந்து வருகின்றன.

வழுக்கைத் தலை ஆரோக்கியத்திற்கு நல்லது

30 வயதுக்கு முன் வழுக்கைத் தலை ஏற்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

கையடக்க தொலைபேசி மூலம் பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய வசனங்களைப் பரிமாறிக் கொண்டமைக்காக இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் 3 மாத சிறைத்தண்டனை விதி த்து துபாய் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
துபாயிலுள்ள எமிரேட்ஸ் விமான சேவை உத்தியோகத்தர்களான மேற்படி ஆணினதும் (47 வயது) பெண்ணினதும் (42 வயது) பெயர்கள் சட்டக் காரணங்களுக்காக வெளியிடப்பட வில்லை.

இந்த பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய வசனங்கள், திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை பேண மேற்படி ஜோடி திட்டமிட்டிருப்பதை அடையாளப்படுத்துவதாக உள்ளதென துபாய் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

துபாயில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பு சட்ட விரோதமானதாகும்.

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் பாகிஸ்தானிய உப்புச்சுரங்கம்

Khewra salt mine

பாகிஸ்தானின் கெவ்ரா (Khewra) பிரதேசத்திலுள்ள உப்புச் சுரங்கமானது ஆஸ்துமா வியாதியை குணப்படுத்தும் அற்புத தன்மையைக் கொண்டதாக விளங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளி, 19 மார்ச், 2010

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.

கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்

கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்வதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பெண்களைத் தாக்கும் என்று பரவலான எண்ணம் உள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல