வியாழன், 25 பிப்ரவரி, 2010

எது சொந்தம்?

அவசர அவசரமாக ஓடிப்போய் ஒரு பஸ்ஸில் ஏறி இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டார் ஒருத்தர். நடத்துநர் பின்னால் நின்றார். அதனால் எழுந்து சென்று அவரிடம் காசைக் கொடுத்து டிக்கெற் வாங்கிவிட்டுத் திரும்பி வந்தார். ஏற்கனவே இவர் உட்கார்ந்த இடத்தில் வேறொருவர் உட்கார வந்தார். இவர் உடனே ஓடிச் சென்று “சேர்... அது என்னுடைய இடம் என்று சொல்லிக்கொண்டே அதில் உட்கார்ந்து கொண்டார்.

இது நாம் தினசரி பார்க்கும் ஒரு காட்சிதான். பத்து நிமிடம் பிரயாணம் செய்வதற்குள்ளேயே அந்த இருக்கையை நமக்குச் சொந்தம் என்று நினைத்து விடுகிறோம். பல நாள் வாழ வேண்டிய வாழ்க்கை இது...

அதனால் பார்ப்பதையயல்லாம் நமக்குச் சொந்தமென நினைக்கிறான் பாமர மனிதன். துறவியயாருவர் அரண்மனைக்குச் சென்று ராஜாவைப் பார்த்தார்.

“என்ன வேண்டும்?” என்று கேட்டார் ராஜா. “பயணிகள் தங்கும் இந்த இடத்தில் தூங்குவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும்” என்றார் துறவி. ராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. “பயணிகள் தங்கும் விடுதியல்ல இது. இது என்னுடைய அரண்மனை’ என்றார் ராஜா. அந்தத் துறவி ராஜாவைப் பார்த்துக் கேட்டார்.

“உங்களுக்கு முன் இது யாருக்குச் சொந்தம்?” “என் தந்தைக்குச் சொந்தம்”. “அவர் இப்போ எங்கே?” “அவர் இப்பொழுது இல்லை. இறந்துவிட்டார்.” “சரி... அவருக்கு முன்னாள் யாருக்குச் சொந்தம்” “அவருக்கு முன் என் பாட்டனாருக்குச் சொந்தம்.” “அவர் எங்கே?” “அவரும் இப்பொழுது இல்லை.”

“பார்த்தாயா... அவர்களெல்லாம் இங்கே கொஞ்சக் காலம் தான் தங்கியிருந்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவ்வளவு தான்... அப்படியிருக்கும் போது இது பயணிகள் தங்குமிடமில்லாமல் வேறு என்ன?” என்று கேட்டார் துறவி. ராஜா யோசித்தார்.

புறப்படுவதற்கு முன் கொஞ்சக் காலம் தங்கிவிட்டுப் போகு மிடம் தான் இது என்பதைப் புரிந்து கொண்டார். இப்படித்தான் இன்று பலர் சொந்தமில்லாததையயல்லாம் சொந்தமென்று நினைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்லியிருக் கிறார். கடவுள் இரண்டு சமயங்களில் சிரிக்கிறாராம். ஒரு சமயம்... ஒரு மருத்துவர் ஒரு நோயாளியிடம் பயப்படாதே... நான் உன்னைக் காப்பாற்றி விடுகிறேன்... என்று சொல்லும் போது “நாம் இந்த ஆளின் வாழ்க்கையை முடிக்கத் திட்டம் போடுகிறோம். இவன் அவனைக் காப்பாற்ற நினைக்கிறானே” என்று நினைத்துச் சிரிப்பாராம்.

இன்னொரு சந்தர்ப்பத்தில்... அண்ணனும் தம்பியும் அப்பா விட்டுட்டுப் போன நிலத்தை இரண்டாகப் பிரித்து நடுவில் கோடு போட்டு கோட்டுக்கு இந்தப் பக்கம் என்னுடையது... அந்தப் பக்கம் உன்னுடையது என்று சொல்லும் போது கடவுளுக்குச் சிரிப்பு வருமாம்!

அவர் நினைப்பாராம், “இந்த இடம் முழுவதும் நம்முடையது. அப்படியிருக்கும் போது இந்த இரண்டு பேரும் என்னுடையது, உன்னுடையது என்று உரிமை கொண்டாடுகிறார்களே” என்று நினைத்துச் சிரிப்பாராம். யோசித்துப் பார்த்தால் நியாயமாகத்தான் இருக்கிறது. இருக் கிறதையயல்லாம் சொந்தமாக்கிக் கொண்டு அதை எப்படிப் பாதுகாப்பது என்று யோசிப்பதிலேயே நம்முடைய காலம் கழிந்து விடுகிறது.

நம்ம ஆள் ஒருத்தன் பெரிய வீடொன்று கட்டினான். ஒரு நாள் அவன் பட்டணத்துக்கு வந்தான். திடீரென்று புயல்த மழைத வெள்ளம் என்று ஊரிலிருந்து செய்தி வந்தது. “உன்னுடைய வீடு வெள்ளத்தில் இடித்துக் கொண்டு போய்விட்டது” என்று சொன்னார்கள்.

இவன் கவலைப்படவேயில்லை... இருக்கவே இருக்காது... என்னுடைய வீட்டுக்கு எந்த ஆபத்தும் வராது... வந்திருக்காது என்றான்.“எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய்” என்று கேட்டார்கள்.“வரும்போதே அதை பத்திரமாக பூட்டிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். சாவிகூட என் சட்டைப் பையில் தான் இருக்கிறது” என்றான்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல