வியாழன், 25 பிப்ரவரி, 2010

இதமும் பிரியமும்

“இதோ இருக்கிறாரே... இவர் ரொம்பவும் இதமாகப் பேசக் கூடியவர்” என்று ஒருத்தரை அறிமுகப்படுத்தினார் ஒரு நண்பர். “இதோ இவர் ரொம்பவும் பிரியமாகப் பேசக் கூடியவர்” என்று இன்னொருவரையும் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்? இப்பொழுது உங்களோடு நான் பேசுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கேட்பதற்கு எது இன்பமாக இருக்குமோ அதைச் சொல்லுவது பிரியம்! அதாவது உங்களுக்கு எதைச் சொன்னால் பிடிக்குமோ அதைச் சொல்வது பிரியம்.

ஒரு ராஜாவுக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சர்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? இதமாகச் சொல்பவர்களாக இருக்க வேண்டும்.பிரியமாக பேசுபவர்களாக இருக்கக் கூடாது. ஒரு அரசனிடம் பேசும்போது அவனுக்கு எது நன்மையோ அதைச்சொல்ல வேண்டும்.

ஆனால், எல்லோரும் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு அரசனுக்கு என்ன பேசினால் பிடிக்குமோ அதைப் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஏன் அப்படிச் பேசுகிறீர்கள் என்று கேட்டால் அப்படிப் பேசினால் தான் எங்களுடைய சம்பளத்தை உயர்த்துவார் என்று சொல்வார்கள். இதம் என்பது பலசமயங்களில் கசப்பாகத்தான் இருக்கும். அதனால் அதைச் சொல்பவர்களை யாருக்கும் பிடிக்காது. அதனால் தான் விபீஷணனை இராவணுக்குப் பிடிக்காமல் போனது. அன்றைக்கு என்ன நடந்தது.... இராவணன் தன்னுடைய அமைச்சர்களையயல்லாம் கூப்பிட்டு ஆலோசனை கேட்டான். ஆனால் அவர்கள் நல்ல ஆலோசனை சொல்லவில்லை. இராவணனுக்கு எதைச் சொன்னால் பிடிக்குமோ அதைச் சொன்னார்கள்.

“சீதையை நீயே வைத்துக் கொள்- இராமனை நாங்கள் கொன்று விடுகிறோம்” என்றார்கள். ஆனால் விபீஷணன் என்ன சொன்னான் தெரியுமா?

“தனியாக நின்று இராமனை நாம் ஜெயிக்க முடியுமா? அதனால் சீதையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவனிடம் மன்னிப்புக் கேள் என்றான். இந்த இதம் இராவணனுக்கு கசப்பாக இருந்தது. விபீஷணன் சொன்ன வார்த்தைகள் இராவணனிடம் எடுபடவில்லை. நம்மிடம் யாராவது வந்து ஒரு யோசனை சொன்னால் கூட அந்த யோசனைக்குப் பின்னால் இருப்பது இதமா? பிரியமா? என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நல்ல யோசனை நமக்குப் பிடிக்கவில்லையயன்றால் கூட அதை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஒரு ராஜா இருந்தார். அவரிடம் பிரியமாகவும் இதமா கவும் பேசக் கூடிய அமைச்சர் ஒருவரும் இருந்தார். ஒரு நாள் இரவு எதிரி நாட்டு மன்னன் வந்து அரசியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான். அதாவது சிறை யயடுத்து விட்டான். இது தெரிந்ததும் அமைச்சர் உடனே ராஜாவிடம் சொல்வதற்கு ஓடிவந்தார்.

“அரசே! அந்நிய நாட்டு மன்னன் அரசியை தூக்கிக் கொண்டு போய்விட்டான். என்ன செய்யலாம்?” “உடனே அந்த பகை மன்னனை எங்கிருந்தாலும் கண்டு பிடித்துக் கொண்டு வாருங்கள்!” “ஏன்?” “அவனுக்குப் பாராட்டுவிழா நடத்தி பத்தாயிரம் பொற்காசுகள் பரிசு கொடுத்தனுப்ப வேண்டும்”.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல