வியாழன், 25 பிப்ரவரி, 2010

அமெரிக்க அதிபராக விரும்பும் நடிகர்

ஹாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி என்று பாராட்டப்படும் வில் ஸ்மித் (Will Smith) எதிர்காலத்தில் அமெரிக்க அதிபராக வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்திய நட்சத்திர நடிகர்களுக்கு அரசியல் ஆசை வருவது போல வில் ஸ்மித்தும் சமீப காலமாக திரைப்பட துறையிலிருந்து விலகி அரசியலில் குதிக்க எண்ணி வருவதாக அவரது மனைவி ஜாடா பிங்கட் (Jada Pinkett) கூறியுள்ளார்.

ஒரு சில முறை அமெரிக்க அதிபராக ஸ்மித் தன்னை கற்பனை செய்து கொண்டு பார்த்துள்ளதாக அவர் பார்த்துள்ளார். கணவருக்கு அதிபராகும் ஆசை இருந்தாலும், அதிபர் மனைவியாக வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இல்லை என்று ஜாடா கூறியுள்ளார்.

இருப்பினும் அரசியலில் ஈடுபட்டால் கல்வித்துறை சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.ஸ்மித் மற்றும் அவரது மனைவி இருவருமே சமூக சேவை மற்றும் நன்கொடை வழங்குவதில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அமெரிக்க பிரபல நடிகை அஞ்சலினா ஜோலி (Angelina Jolie) க்கும் இப்படி ஒரு விருப்பம் உள்ளதாகவும், தான் அதிபராக வந்தால் தன்னால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று ஜோலி குறிப்பிட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல