ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

தவறான உணவுப் பழக்கம், இரவில் வெகு நேரம் கண்விழித்தல், இரவு வெகு நேரம் கழித்து சாப்பிடுவது, மது குடிப்பது, மலத்தை அடக்குதல், போதிய உடற் பயிற்சி இல்லாமை ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும்.

வெள்ளைப்பூண்டு, வெங்காயம், மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை அதிகம் உண்பதால் உடலில் ஏற்படும் சீரண நிலை குறைந்துவிடுகிறது. இதனாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி, புதினா, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, நிலக்கடலை, கீரைகள், சோயாபீன்ஸ், மாங்காய் ஆகியவைகளில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவைகளைச் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

உணவில் நார்ப் பொருட்களும், தவிட்டுப் பொருட்களும் இல்லாவிட்டால் மலம் குடலில் ஒட்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் திராட்சை, ஆப்பிள், எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம். உண்ணும் உணவில் பாதி உடலுக்கு உணவாகிறது. மீதி மலமாக வெளியேறுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல