ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பூக்களின் மருத்துவ குணங்கள்:

மல்லிகை மல்லிகைப்பூவை தலையில் சூடுவதால் கண்பார்வை கூர்மை அடைகிறது. இதன் இலையை இளஞ்சூடாக்கி விழி மீது வைத்துக்கட்டினால் கண்ணில் உள்ள சிவப்பு மறையும்.

ரோஜா

ரோஜா மலர் இதயத்திற்கு வளமை சேர்க்கிறது. அதை முகர்ந்தால் சளி குறையும். தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
இவ்விதழின் சாற்றைப் பிழிந்து ஒரு துளி மூக்கில் விட்டால் தலைவலி படிந்து போகும்.

மகிழம்பூ

மகிழம்பூ மரம் அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே வளர்ந்து வரும்.
மகிழம்பூவை எடுத்து தேங்காய் எண்ணெய் உள்ள போத்தலில் போட்டு வைக்க வேண்டும். பின்னர் அதிலிருந்து மேலாக தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் நன்றாக வளரும். அதுமட்டுமல்லாமல் கூந்தல் வாசனையாகவும் இருக்கும்.

புளியம்பூ

புளியம்பூவுடன் காரம், உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து உண்ணலாம். இதனால் நீர்க்கடுப்பு குணமாகும். மூலதாரச் சூடு தீரும்.
சீதபேதி, வயிற்றுப்போக்கு முதலிய வியாதிகளும் குணமாகும்.

வாழைப்பூ

வாழைப்பூவுடன் பருப்பு கலந்து சாப்பிட்டால் குடல் புண்கள் ஆறும்.
வாழைப்பூவை அடிக்கடி உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல