ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்

நான் முதிர்ச்சியடைவதை கொண்டாடுவதற்காக வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்த 45 பாடங்களை வரைந்தேன். அதுவே நான் எழுதியவற்றில் மிக முக்கியமான பத்தி தற்போது எனது வாழ்க்கைச் சக்கரத்தின் முன் 90 ஐக் காட்டுகிறது. அதோ அந்தப் பத்தி மீண்டும் ஒரு முறை : (என ஓஹியோ கிளிவ் லன்ட்டைச் சேர்ந்த றெஜினா பிரெட் (Regina Brett) எழுதுகிறார்)

1. வாழ்க்கை அழகானதல்ல இருப்பினும் அது நல்லது.

2. உங்களுக்கு சந்தேகமாக இருக்கும் வேளை அடுத்த சிறு அடியை சரியாக எடுத்து வையுங்கள்.

3. வாழ்வுக் காலம் மிகவும் குறுகியது, மற்றவர்களை வெறுப்பதில் காலத்தை செலவிட முடியாது.

4. நீங்கள் சுகயீனமாக இருக்கும் வேளை உங்கள் தொழில் உங்களைப் பராமரிக்காது. உங்கள் பெற்றோரும் நண்பர்களுமே கவனிப்பார்கள். எனவே அவர்களுடன் தொடர்பை பேணுங்கள்.

5. ஒவ்வொரு மாதம் தவறாது உங்கள் கடன் அட்டைப் பணத்தை செலுத்திக் கொள்ளுங்கள்.

6. எல்லா விவாதத்திலும் நீங்கள் வெற்றி பெற வேண்டியது அவசியமல்ல. இணங்காதிருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

7. எவருடனாவது சேர்ந்து அழுங்கள். தனியே புலம்புவதை விட அது கூடுதலான சுகமளிக்கும்.

8. கடவுளின் மீது சினங்கொள்வது ஓகே.அதை அவர் எடுத்துக் கொள்ள மாட்டார்.

9. ஓய்வு பெற்ற பின் தேவைக்காக முதலாவது சம்பள கட்டிலிருந்த சேமிக்கத் தொடங்குங்கள்.

10. சொக்லட்டு என்று வரும் போது எதிர்ப்பு காட்டுவது பலனற்றது.

11. கடந்த காலத்துடன் சமாதானம் செய்யுங்கள், எனவே அது தற்காலத்தின் கழுத்தை திருக மாட்டாது.

12. நீங்கள் அழுவதை உங்கள் பிள்ளைகள் பார்ப்பதில் தவறில்லை.

13. உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்காதீர்கள். அவர்களின் பயணத்தின் குறிக்கோள் உங்களுக்குத் தெரியாது.

14. ஒரு உறவு இரகசியமானதென்றால் நீங்கள் அதற்குள் நுழையாதீர்கள்.

15. ஒரு கண் சிமிட்டலில் எல்லாமே மாற்ற மடையக் கூடியவை. கவலைப்படாதீர்கள்.
இறைவன் என்றுமே கண் சிமிட்ட மாட்டார்.

16. ஆழ்ந்த மூச்சு எடுங்கள். அது உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.

17. உபயோகமற்ற, அழகில்லாத அல்லது சந்தோஷமளிக்காத எதையும் அகற்றி விடுங்கள்.

18. உங்களை சாகடிக்காத எதுவும் உண்மையில் உங்களை வலிமையடையச் செய்கிறது.

19. சந்தோஷமான குழந்தைப் பருவத்தை அனுபவிக்க எப்போதுமே தாமதமாகவில்லை.
ஆனால் அதற்கு அடுத்த நிலை உங்களைப் பொறுத்தது. வேறு யாரிடமும் இல்லை.

20. வாழ்க்கையில் எதில் அன்பு வைத்தீர்களோ அதற்குப் பின்னால் செல்ல வேண்டி ஏற்பட்டால் ஒரு பதிலுக்கு “இல்லை' என்பதை மட்டும் தெரிவு செய்யாதீர்கள்.

21. மெழுகுதிரியை கொழுத்துங்கள், அழகான விரிப்பை உபயோகியுங்கள், நாககமான ஆடைகளை அணியுங்கள். அவற்றை விஷேச வைபவங்களுக்காக பத்திரப்படுத்தி வைக்காதீர்கள். இன்றும் விசேட நாள் தான்.

22. மேலதிகமாக தயார் செய்யுங்கள் பின்பு போகிற போக்குடன் செல்லுங்கள்.

23. இப்போது விடாக் கண்டனாக இருங்கள். வயது முதிர்ந்த காலத்தில் ஊதா வர்ணம் அணியக் காத்திருக்காதீர்கள்.

24. மிக முக்கியமான பாலியல் உறுப்பு மூளை.

25. உங்கள் மகிழ்ச்சி எவர் வசமும் இல்லை. உங்களிடம் மட்டும்தான்.

26. “அனர்த்தம்' என சொல்லப்படுவதை “ஐந்து வருடங்களின் பின்பு இது ஒரு விஷயமா?' என்னும் சொற்களால் கட்டம் இடுங்கள்.

27. எப்போதும் வாழ்க்கையை தெரிவு செய்யுங்கள்.

28. எதையும், எவரையும் மன்னித்து விடுங்கள்.

29. மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது உங்கள் பிரச்சினையல்ல.

30. எல்லாவற்றையும் காலம் சுகப்படுத்தும்.எனவே நேரத்தை ஓட விடுங்கள்.

31. எப்படியாயினும் நல்லது அல்லது கெட்ட நிலைமை ஒருநாள் மாற்றமடையும்.

32. உங்களை மிக காத்திரமாக எடுக்காதீர்கள். வேறு எவரும் அப்படி எடுப்பதில்லை.

33. அற்புதங்களில் நம்பிக்கை வையுங்கள்.

34. நீங்கள் என்ன செய்தீர்கள் அல்லது என்ன செய்யவில்லை என்பதால் அல்ல கடவுள் கடவுளாக இருப்பதாலேயே உங்களின் மீது அவர் அன்பு செலுத்துகிறார்.

35. உங்கள் வாழ்க்கையை கணக்காய்வு செய்யாதீர்கள். அதற்கு இப்போதே உருவம் கொடுத்து காட்சிப்படுத்துங்கள்.

36. வயதாளியாக வளர்ச்சியடைவது, மரணிக்கும் இளமையை வெல்கிறது.

37. உங்கள் பிள்ளைகள் ஒரு முறைதான் குழந்தை பராயத்தை பெறுகிறார்கள்.

38. முடிவில் நீங்கள் அன்பு செலுத்தியதே உண்மையான சமாச்சாரமாகும்.

39. ஒவ்வொரு நாளும் வெளியே செல்லுங்கள். எல்லா இடங்களிலும் அற்புதங்கள் காத்தி ருக்கின்றன.

40. நாங்கள் எல்லோரும் எங்கள் பிரச்சினைகளை ஒரு குவியலில் எறிந்து விட்டு மற்றவர்கள் ஒவ்வொருவருடையதையும் பார்ப்போ மாயின் திரும்ப எங்களுடையதைப் பற்றிக் கொள்வோம்.

41. பொறாமை நேரத்தை வீணடிக்கும் செயல் உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நீங்கள் ஏற்கனவே பெற்றிருக்கிறீர்கள்.

42. மிக உத்தமமானது இனிமேல்தான் வர இருக்கிறது.

43. நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பது பெரிய விஷயமில்லை. எழுங்கள், உடை அணியுங்கள், முன்னேறுங்கள்.

44. இணங்கிப் போங்கள்.

45. வாழ்க்கை ஒருதலை வணக்கத்துடன் கட்டப்படவில்லை. இருப்பினும் அது ஒரு கொடை.

இந்தப் பத்தியை 93% மக்கள் முன் சமர்ப்பிக்க மாட்டார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் 7% ற்குள் இருந்தால் இதை “7%' என்னும் தலைப்புடன் சமர்ப்பியுங்கள்.

நான் 7% ற்குள் நாங்கள் தெரிவு செய்து கொண்ட நண்பர்கள் தான் எங்கள் குடும்பம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல