சனி, 3 ஏப்ரல், 2010

ராதா மகளைப் போல் ஸ்ரீதேவியின் மகளும் திரைக்கு வருகிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி நாயகியாகக் கொடி கட்டிப் பறந்த அந்த கால கனவுக்கன்னி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவி விரைவில் கதாநாயகியாக தனது திரையுலகப் பயணத்தைத் துவங்குகிறார். எம்ஜிஆருடன் “நம்நாடு” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடிப்பில் கலக்கியவர் ஸ்ரீதேவி.


சிவகாசியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை 1996-ல் திருமணம் செய்து மும்பையில் குடியேறினார். ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் ஜானவியை கதாநாயகியாக்குகிறார். நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியாம். . கதை விவாதம் முடிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் தொடங்குகிறதாம் ஷூட்டிங். மூத்த மகன் சைதன்யாவுடன் ராதா மகள் அறிமுகமான படம் ஃப்ளாப் ஆனதையும் ஸ்ரீதேவி கவனத்தில் வைத்திருக்கிறாராம்.

சமீபத்தில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த விழாவில் நடிகை ஸ்ரீதேவி மகளுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ராதா மகளைப் போல் ஸ்ரீதேவியின் மகளும் திரைக்கு வருகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல