சனி, 3 ஏப்ரல், 2010

நடிகை பூஜாவுக்கு கல்யாணமா?

நான் கடவுள் படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறப் போகும் கனவில் இருக்கும் பூஜாவுக்கு தற்போது கல்யாணக் கனவும் வந்திருக்கிறதாம்.

இது அவரது தந்தையின் அன்புக் கட்டளையால் உருவான கனவாம் வயசாயிட்டே போகுது. எந்தப் பக்கம் போனாலும் எல்லா நாயகர்களும் நைட் பார்ட்டிக்கு மட்டும்தான் உன்னை பிக்கப் பண்ணிட்டுப் போறாங்க.

இப்படியே போனா நல்லாயிருக்காது. ஒழுங்கா கல்யாணத்தை முடிச்சிட்டு செட்டிலாகப் பாரு’ என்ற தனது தந்தையின் பேச்சைக் கேட்டு பூஜா மனமுருகினாலும், அப்பாவிடம் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை வர்ற ஜூன் மாசத்துக்குள்ள என் கண்ணுல காட்டிரணும். அப்படிக் காட்டிட்டதா பேச்சு மூச்சில்லாம அவருக்குக் கழுத்தை நீட்டுறேன்.

அப்படி ஜூன் மாசத்துக்குள்ள மாப்பிள்ளை கிடைக்கவில்லைன்னா இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்கு கெமரா முன்னாடி மாப்பிள்ளைகளோட டூயட் பாடிக்கிறேன்.

என்னை தொந்தரவு பண்ணக்கூடாது என்று அப்பாவிடம் கண்டிஷனாக தனது கண்டிஷனை சொல்லியிருக்கிறாராம் பூஜா.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல