சனி, 3 ஏப்ரல், 2010

திரையுலகில் பிரமாதமாக பிரகாசிக்க முடியாமல் போன நடிகை ஷோபனா

தென்னகத் தமிழத் திரையுலகம் வந்தாரை வாழவைக்கும் ஒரு இடமாக இனமத பேதமின்றி திறமையுள்ளவர்களுக்கு நிச்சயமாக கைகொடுக்கும் ஒரு ஆல விருட்சமாக இருக்கின்றது. இங்கே தமிழ் தெரிந்த நடிகர், நடிகைகளை விட வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் புகழடைந் ததாக பரவலாக பேசப்படுகின்றது.

அதிலும் நடிகைகளைப் பொறுத்தவரையில் அன்று சரோஜாதேவி, தேவிகா, சாவித்திரி, பத்மினி, ராஜஸ்ரீ, காஞ்சனா, பாரதி, ஜமுனா, அஞ்சலிதேவி, ஜெயந்தி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழ் நடிகைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். அதே நிலைதான் இன்றும் இருக்கின்றது. அந்த வகையில் பழம்பெரும் நடிகைகளான மறைந்த பத்மினி, ராகினி, லலிதா ஆகியோரை அத்தைகளாக கொண்டுள்ள நடிகை ஷோபனாவின் திரையுலகப் பிரவேசம் மிகவும் சுவாரஸ்யமானது.

சினிமா பாதிப்பேயில்லாமல் வளர்ந்த ஷோபனா பத்மினியின் அண்ணன்.மகள் சிறுவயதிலேயே பல குரலில் பேசும் இவர் மனோராமா போல பேசுவாராம். ஒருமுறை பத்மினி அத்தையுடன் நடிகை கே.ஆர். விஜயாவின் வீட்டுக்கு இவர் இரவு உணவுக்கு போயிருந்தாராம். அப்போது கே.ஆர். விஜயா சொந்தமாக மங்கல நாயகி என்ற பெயரில் திரைப்படமொன்றை தயாரித்துக் கொண்டிருந்தாராம். ஷோபனாவின் அழகு குறும்புத்தனத்தை அவதானித்த கே.ஆர். விஜயா அவரை குழந்தை நட்சத்திரமாக அதில் அறிமுகம் செய்தாராம். அந்த ஆண்டில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக அவர் தெரிவு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டதாம்.

ஷோபனா வளர்ந்த பின் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் கமலஹாசனை வைத்து எனக்குள் ஒரு வன் என்ற படத்தை தன்னுடைய கவிதாலயாவுக்காக தயாரித்து இயக்கினார். இதில் கமலுக்கு ஜோ டியாக ஷோபனாவை நடிக்க வைத்தார். எனக்குள் ஒருவன் சுமாராக ஓடிய போதும் இவர் அடுத்து எந்த புதிய படங்களும் இல்லாமலிருந்தார்.

ஆனால் அடுத்த படம் சற்று தாமதமாக இவருக்கு வந்து சேர்ந்தது. அது மலையாளத்தில் பா லசந்திரமேனன் இயக்கி நடித்த “ஏப்ரல் 18' என்ற படமாகும். வர்த்தக ரீதியான எனக்குள் ஒருவன் மற்றும் “ஏப்ரல் 18' நல்ல படம் ஆகிய இரண்டிலும் நடித்தமையினால் ஷோபனாவுக்கு சினிமா பற்றிய ஒரு தெளிவான சிந்தனையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மலையாளப் படங்களில் அன்றைய பிரபலமான இயக்குநர்களான ஜ.வி. சசி, ஃபாசில ஆடூர் கோபாலகிருஷ்ணன், பத்மராஜன், அரவிந்தன், பரதன் போன்றோர் இயக்கத்தில் தன்னை நன்றாக பட்டை தீட்டிக் கொண்டார்.

இவர் தனது அத்தைகளைப் போலவே முறைப் படி நடனம் கற்றுக் கொண்டார்.
பத்மினியளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு நன்றாகவே ஆடுவார். தற்போது திரையு லகத்தை விட்டு ஒதுங்கினாலும் நடனத்தை இன்னமும் விடாமல் ஆடுவதுடன் வகுப்புகளும் செய்கிறார்.

ஷோபனா ரஜினியுடன் இரண்டு படங்களில் தோன்றி நடித்திருக்கிறார். கே.பாலசந்தரின் கவி தாலயாவுக்காக ரஜினி நடித்த “சிவா' படத்தில் இவர் கதாநாயகியாக தோன்றி நடித்தார். இவர் நடித்த மற்றுமொரு படம் தான் மணிரத்தினத்தின் மெகாஹிட் படமான தளபதி. இப்படத்தில் ஷோபனாவை ஆரம்பத்தில் காதலிப்பவராக ரஜனிகாந்த் நடித்திருந்தார்.வசனங்கள் மிகவும் குறைவாக விழிகளாலும் நடன அசைவுகளாலும் ரஜினியை ஷோபனா நேசிப்பது போல மிக சிறப்பாக ஒரு கவிதையாக மணிரத்னம் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் வெற்றியானது ஷோபனாவை தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. அந்த நேரத்தில் சில திரைப்படங்களைத் தயாரித்து இயக்கி நடித்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த கே. பாக்யராஜ், ஷோபனாவை தனது புதிய படத்தில் கதாநாயகியாக புக் செய்தார். இதுவரை இவர் தமிழில் நடித்த படங்களிலேயே மிக சிறப்பானதொரு வேடம் ஏற்று நடித்த படம் பாக்யராஜ் படம்தான்.

““இது நம்ம ஆளு'' என்ற அந்தப் படத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறிய ஐயர் வீட்டுப் பெண்ணாக மிகை நடிப்பில்லாமல் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். கே. பாக்யராஜ் ஷோபனாவை இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக அற்புதமாக பயன்படுத்தியிருந்தார். இது நம்ம ஆளு நூறு நாட்கள் ஓடியமைக்கு பிரதான காரணமாக அமைந்தமை ஷோபனாவின் அற்புதமாக நடிப்பு தானென்பதை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனாலும் இவருக்கு தொடர்ந்து நல்ல படங்கள் அமையவில்லை. ஒரு கட்டத்தில் கதாநாயகன் கதாநாயகிக்கு அக்காவாக அண்ணியாக நடிக்க அழைப்பு வந்தபோது அதனை மறுத்துவிட்ட ஷோபனா முழுநேர நடன நிகழ்ச்சிகளில் தன் கவனத்தை திருப்பினார்.

நாட்டியப் பேரொளி பத்மினி தனது பரத நாட்டிய திறமையினை லதனமாக வைத்து நூற் றுக்கு மேலான வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆனால் ஷோபனா தமிழ்த் திரையுலகில் அந்தளவுக்கு பிரகாசிக்க முடியாமல் போனது நிச்சயமாக அவரின் துரதிஷ்டமாகும். எவ் வாறாயினும் ஷோபனா குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவை இவருக்கு நல்ல படங்களாக இவரை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டுமளவுக்கு சிறந்த படங்களாக இருந்ததை மறுக்க முடியாது.

பாலா. சங்குபிள்ளை
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல