சனி, 3 ஏப்ரல், 2010

திருமணத்தின் போது...

தற்போது இல்லற வாழ்க்கையில் மனமுறிவும், மணமுறிவும் அதிகமாக நடைபெறுகின்றன. எனவே திருமணத்துக்கு முன்பாக முறையான ஆலோசனை பெறுவது அவசியம்.

காதலிக்கும்போது பாராட்டத்தக்க அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டு சிலாகிப்பவர்கள், திருமணத்துக்குப் பின் நெருக்கமாக வாழும்போது குறைகளை சகித்துக் கொள்ள முடியாமல் போவது தான் பிரச்னைக்குக் காரணம். உங்களிடம் என்ன பிரச்னை, அதை எப்படிச் சரி செய்வது என்று “திருமண வாழ்க்கை ஆலோசனை'யில் எடுத்துக் கூறப்படுகிறது. ஆணும், பெண்ணும் திருமண வாழ்க்கைக்கு உண்மையிலேயே தயாராக இருக்கிறார்களா என்று ஆலோசகர்கள் பார்க்கிறார்கள், எந்தெந்த விஷயங்கள் அவர்களின் வாழ்க்கையையே தடம்புரளச் செய்யக் கூடியவை என்று கண்டறிகிறார்கள்.

“வருமுன் காப்பது நல்லது “ஒரு வரையறுக்கப்பட்ட உறவில் இறங்குவதற்கு முன், பெண்ணும் ஆணும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொள்வது நல்லது.

உடல், உணர்வு, அறிவு, சமுக ரீதியாக நீங்கள் திருமணத்துக்குத் தயார்தானா என்று உங்களை நீங்களே “சரி“ பார்த்துக் கொள்ளுங்கள். “ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்“ என்ற பழமொழியையே தலையில் தூக்கி கொண்டு பலர் பிரச்னைகளை மூடி மறைத்து, திருமண வாழ்க்கையைத் துவக்கிவிடுகிறார்கள். அது தவறானது.

மத ரீதியான சடங்குகள் குறிப்பாக கலப்புத் திருமணங்களில் பண விவகாரங்கள் உணவு முறைகளில் (சைவமா?அசைவமா?), வாழ்க்கை முறைகளில், யாருடைய உறவினர், நண்பர்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் பிரச்னைகள் எழலாம். ““உங்கள் வாழ்வின் சில மதிப்பீடுகள் அவற்றில் நீங்கள் அதீத நம்பிக்கை வைத்திருக்கலாம்.

திருமணத்துக்குப் பின் சரியாக வருமா? உங்களை அறியாமல் நீங்கள் கொண்டுள்ள அளவுக்கதிகமான பற்றுகளை அறிந்தாலே போதும். அவற்றில் மாற்றிக் கொள்ளக் கூடியவை எவை, மாற்றிக் கொள்ள முடியாதவை எவை என்று புரிந்து கொண்டு விடலாம்.

மாற்றிக் கொள்ள முடியாதவற்றைத்தான் “மணவாழ்க்கையை உடைக்கும் ஆயுதங்கள்“.

திருமண வாழ்க்கை எதிராகப் போவதற்கு முக்கியக் காரணங்கள், அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளும், மனம் விட்டுப் பேசாத “இடைவெளி'யும்தான்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல