சனி, 3 ஏப்ரல், 2010

கார்த்தி தமன்னா காதல்

எண்பதுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பேசப்பட்ட நட்சத்திரக் காதலர்கள் வெகுசிலர் பிரபு- குஷ்பு ராம்கி- நிரோஷா, பார்த்திபன்- சீதா, சூர்யா- ஜோதிகா என்று போடப்படும் தீர்க்கமான பட்டியலில் இப்போது கார்த்தி- தமன்னா.

இருவரும் இடம்பிடித்து விட்டதாகவும் இனி இவர்களது காதலை தடுத்து நிறுத்த யாருமில்லை. நிலைமை கைமீறிப் போய்விட்டது என்று கோடம்பாக்கத்து செய்திப் பட்ஷிகள் சூடான செய்தியை கக்குகின்றன.

கார்த்தி- தமன்னா இருவரும் இணைந்து நடித்திருக்கும் பையா திரைடப்படம் வெளியாகிய சூழ்நிலையில் சென்னை கடந்த வாரம் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பையா படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

பிரபல தனியார் தொலைக்காட்சிகள், முக்கிய இணைய தளங்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த ஹோட்டலில் கார்த்தி தமன்னா, படத்தின் இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் பேட்டியளித்திருக்கிறார்கள்.

தமன்னா- காரத்தி இருவரிடமும் மறக்காமல் காதல் பற்றி அனைவரும் கேள்வி எழுப்பியதாகவும், தமன்னா கார்த்தியை புகழ்ந்து தள்ளிவிட்டு மனசுக்கு நெருக்கமா சில பேர மட்டும் வச்சுக்குவோம் இல்ல! கார்த்தியும் அப்படித்தான் என்று பிரபல ஆங்கிலப்பத்திரிகையின் பெண் நிருபரிடம் தமன்னா சொல்லியிருப்பதாக நம்பிக்கையான தகவல் நம் காதுகளை எட்டுகிறது.

பொதுவாக ஒரு படத்தில் இடம்பெரும் 30 சதவீத காட்சிகளில் மட்டும்தான் கதாநாயகி நடிப்பார். ஆனால் பையாவின் கதையில் நாயகனோடு வணக்கம் போடுகிறவரை நாயகி தமன்னா நடித்திருக்கிறார்.

இதற்காக 80 நாட்கள் கால்iட் கொடுத்தாராம் தமன்னா. காரில் பயணம் செய்வதே கதை என்பதால் சென்னையில் தொடங்கி மும்பை வரை பல்வேறு இடங்களில் படம் பிடித்த போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

மைசூரில் நெடுஞ்சாலை அருகிலேயே உள்ள ஒரு அருவியில் படப்பிடிப்பு முடித்து மாலை கார்த்தியும் தமன்னாவும் ஒரே காரில் ஹோட்டலுக்கு கிளம்பியவர்கள் இரவு பத்துமணிக்குத்தான் திரும்பினார்களாம்.

கார்த்தியை தமன்னா மைசூரில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன. கார்த்தியையும் ‘வாங்க கார்த்தி” என்று தமன்னாவையும் அழைத்து கலாய்த்தராம் இயக்குனர் லிங்குசாமி.

இவர்களுக்குள் காதல் கெட்டிப்பட இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறது. பையா பட வட்டாரம். இங்கேதான் சூரியா- ஜோதிகாவின் காதல் வந்து நிற்கிறது.சூரியா- ஜோதிகா காதலைப் பற்றிய சக்சஸ் ஸ்டோரியை மூன்று வருடங்களுக்கு முன் பிலிம்பேர் பத்திரிகையில் படித்ததை நினைவில் வைத்து பையா படப்பிடிப்பில் கார்த்தியிடம் விசாரித்த தமன்னா உங்க ஃபேமிலி ஆல்பம் பார்க்க வேண்டும் என்றாராம்.

இதோ கையிலேயே இருக்கே என்று லாப்டாப்பை பிரித்து கார்த்தி காட்ட... காதல் மேலும் இறுகியிருக்கிறது. இந்தக் காதலின் உச்சமாக கார்த்தியின் வீட்டுக்கு விசிட் செய்த தமன்னா கார்த்தியின் பெற்றோரிடம் ஆசி வாங்கித் திரும்பியிருக்கிறார்.

நம்ம வீட்டுக்கு சினிமாலேர்ந்து ஒரு மருமகள் போதும்ப்பா என்று சிவகுமார் எச்சரித்துள்ளதாகவும் அதை கார்த்தி காதில் போட்டுக்கொண்டது போல் நடித்துக் கொண்டே தமன்னாவை உயிருக்குயிராக காதல் செய்ய ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் அனல் பறக்கின்றன.

பிரபல ஒளிப்பதிவாளர் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள சிறுத்தை படத்தில் தமன்னாவையே ஜோடியாக கார்த்தி இடம்பிடித்து கேட்டு வாங்கியுள்ளார் எனவும் இந்தப் படத்தில் காதல் இன்னும் தீவிரமாகுமென்று எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல