சனி, 3 ஏப்ரல், 2010

காசநோய் குறித்து அச்சப்படத் தேவையில்லை

உலகில் உள்ள காச நோயாளர்களில் அரைப் பகுதியினர் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, சீனா நாடுகளில் காணப்படுகின்றனர். சன நெரிசல் கூடிய குடியிருப்புகளையும் அவற்றில் போதிய காற்றோட்டம், சூய ஒளி குறைவான அறைகளில் வாழ்பவர்களையும், போசணை நிலை, நோயெதிர்ப்புத் தன்மை குறைவானவர்களையும் காச நோய் விரைவாக தொற்றிக் கொள்கிறது.

காச நோய் என பரிசோதித்து உறுதிப்படுத்திய பின் குணமாக்கக் கூடிய காச நோய் ஏற்பட்டுள்ளதை நோயாளி ஏற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக 6 மாதங்கள் மாத்திரைகளை அருந்துவதன் மூலம் முற் றாக இந்நோயை குணமடையச் செய்யலாம். இதற்கு மாறாக சிகிச்சை பெறாமல் ஒதுங்கினால் உடல் நிலை பெரிதும் பாதிப்படைவதுடன் சில அங்கங்கள் செயலிழந்து போகும் நிலை ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம். காற்றின் மூலம் பரவும் நோயென்பதால் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கு அயலவர்களுக்கு தொற்றடையச் செய்யும் நிலை ஏற்படும்.

மருந்து / மாத்திரைகள் அருந்துவதை இடையில் நிறுத்தினால் பல்கூட்டு மருந்துகளுக்கு எதிர்ப்பைக் காட்டக் கூடிய நிலையையுடைய காச நோய் (MDR - TB) ஏற்படும். இது மேலும் சிகிச்சையில் சிக்கல் தன்மையை ஏற்படுத்தும்.

காச நோய் தொற்றும் முறை

காச நோயாளி இரும் போதும், தும்ம் போதும் பலமாகச் சிரிக்கும் போதும் மிகச் சிறிய திரவத் துளிகள் காற்றில் விடுவிக்கப்படுகின்றன. இத்திரவத் துளிகளில் காணப்படும் மைக்கோ பக்ரீரியம் யூபோகுளோசிஸ் Mycobacterium tuberculosis பக்ரீரியாவானது மனிதரில் இருந்து மனிதனுக்கு காற்றின் மூலம் காவப்பட்டு சுவாசத் தொகுதியின் பாதைகளில் சுவாசப்பைச் சிற்றறைகளில் பல மடங்காகப் பெருக்கமடைந்து நோயை ஏற்படுத்துகின்றது. பெருமளவில் சுவாசத் தொகுதியின் உறுப்புக்களைப் பாதித்தாலும் மூளை, முண்ணான், நிணநீர் முடிச்சுகள், கண், தோல் போன்ற பகுதிகளையும் பாதிப்படையச் செய்யும்.

காச நோயின் அறிகுறிகள்

ஏறத்தாழ 3 வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியான இருமல், இரவில் மெல்லிய காய்ச்சல், இரவில் வியர்த்தல், சுவாசிக்கக் கடினமாக இருத்தல், இலகுவில் களைப்படைதல், உடலின் நிறை குறைவடைதல், இருமும்போது சளியுடன் குருதியும் வெளியேறல் போன்றன காசநோயின் அறிகுறிகளாகும். நோயை உறுதிப்படுத்தல் / இனங்காணுதல் பெரும்பாலும் சளிப் பசோதனை, எக்ஸ்ரே (X - ray) தோல் ஊசிப் பசோதனை (மூன்று) மூலம் இனங்காணப்படுகிறது.

இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளோர்

புகை பிடித்தல், மதுபானம், போதை வஸ்து பழக்கடையவர்கள், நீழிவு, புற்று நோய், கடுமையான சிறுநீரக நோய் உடையவர்கள், எயிட்ஸ் நோயாளிகள், நீண்ட காலமாக “ஸ்ரி ரொயிட்' வகை மருந்துகளை அருந்துபவர்கள், போதிய காற்றோட்ட, ஒளி கிடைக்காத சூழலில் வாழ்பவர்களை குறிப்பிடலாம்.

காச நோய் பரவாமல் குறைக்கும் வழிகள்

காச நோய் என சந்தேகப்படுபவர் அல்லது அறிகுறிகளை உடையவர் உடனடியாக உரிய சுகாதார நிலையங்களில் வைத்தியரின் சிபாரிசில் சளிப் பரிசோதனை X - ray (எக்ஸ்ரே) பரிசோதனை அல்லது தோற் பரிசோதனை செய்து நோய் நிலைமையை உறுதிப்படுத்தல், நோய் ஏற்பட்டால் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு சிகிச்சை பெறுதல், கண்ட கண்ட இடங்களில் சளியை துப்பாது பேணி போன்ற மூடியுடைய பாத்திரங்களில் சேகரித்து அழித்து விடவேண்டும். இருமும் போது கைக்குட்டை பயன்படுத்தல்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல