சனி, 29 மே, 2010

தர்ப்பூசணியிலிருந்து வாகன எரிபொருள்

தர்ப்பூசணியிலிருந்து (வோட்டர் மெலோன்) எரிசக்தியா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் உண்மையில் அப்படி ஒரு எரிசக்தி நமது வாகனங்களுக்கு விரைவில் கிடைக்கத்தான் போகிறது.

கோடைகாலம் வந்துவிட்டால் போதும், எங்கு பார்த்தாலும் தர்ப்பூசணிப் பழங்கள் விற்பனை செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். வெப்பத்தைத் தணிக்க, குளிர்ச்சியைப் பெற நாம் இந்த தர்ப்பூசணிப் பழங்கள் மற்றும் பானங்களை வாங்கி அருந்துவது வழக்கம்.

ஆனால் இந்த தர்ப்பூசணிப் பழத்திலிருந்து வாகனங்களை இயக்குவதற்குத் தேவையான எரிசக்தியை உருவாக்க முடியும் என்பதுதான் புதிய செய்தி.

உலகில் விளையும் தர்ப்பூசணிப் பழங்கள் அனைத்தையும் நாம் சாப்பிட்டுவிடுவதில்லை. விளைவிக்கப்படும் தர்ப்பூசணிப் பழங்களில் பெரும்பாலானவை வீணாகக் குப்பையில் எறியப்படுகின்றன.

இப்படியாக வீசப்படும் தர்ப்பூசணிப் பழங்களை ஏதேனும் தேவைக்குப் பிரயோசனப்படுத்த முடியாதா என்று சிந்தித்த அமெரிக்க விஞ்ஞானிகள்தான், பல்லாண்டு கால ஆராய்ச்சியின்பின் தர்ப்பூசணியின் இந்தப் புதிய மற்றும் அத்தியாவசியப் பயன்பாட்டைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஒரு ஏக்கரில் 60 முதல் 100 தொன் வரையிலான தர்ப்பூசணியை ஆண்டுதோறும் அறுவடை செய்கிறார்கள்.

ஒரு ஏக்கர் நிறைந்த தர்ப்பூசணியைக் கொண்டு சுமார் 87 லீற்றர் எதனோல் எரிபொருளைத் தயாரிக்க முடியும். இதனடிப் படையில் பார்த்தால், தர்ப்பூசணித் தோட்டத்துச் சொந்தக்காரர்கள், ஆண்டுதோறும் தாம் தேவைக்கதிகமாக விளைவிக்கும் பழங்களைப் பயன்படுத்தி, தமது சொந்த எரிபொருள் தேவையைப் பூர்த்திசெய்து கொள்ள முடியும்.

சற்றுப் பெரியளவில் இந்தத் தொழில் நுட்பத்தை விவுபடுத்தினால் பெரிய பெரிய ஆலைகளை நிறுவி, தர்ப்பூசணிப் பழங்கள் மூலமான எபொருளை உற்பத்தி செய்ய முடியும்.

அப்படியாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தால், எபொருள் தேவையை மிகையாகப் பூர்த்திசெய்வதுடன் நல்ல விற்பனைச் சந்தையையும் பெறலாம்.

புவி வெப்பமடைதல் தொடர்பான பிரச்சினைக்கும் இந்த மாற்று எரிபொருள் நல்லதொரு தீர்வைத் தரும் என்பதால், வறு வகைகளிலும் மனிதருக்குப் பயனுள்ளதாக அமையும்.

இந்த மாற்று எபொருள் சக்தியை, அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் வாகனப் போக்குவரத்துக்கு மட்டும் உபயோகப்படுத்தினாலே, இயற்கையின் சமநிலையைக் குழப்பும் காரணிகளின் உருவாக்கத்துக்குப் பெருமளவில் தடைபோடலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல