சனி, 29 மே, 2010

திருநங்கையை திருமணம் செய்த பாக்கிஸ்தானியர் கைது

திருநங்கை ஒருவரை திருமணம் செய்ய முயன்ற நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானிய பெஷாவர் நகரில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மேற்படி திருமணத்தில் கலந்து கொள்ள சமுகமளித்திருந்த சுமார் 45 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.அவர்களில் அநேகர் அலிகளாவர்.

42 வயதான உர வியாபாரியொருவரே இவ்வாறு திருநங்கையை திருமணம் செய்து சிறைவாசத்தை எதிர் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் பெருமளவு திருநங்கைகள் வாழுகின்றனர். அவர்களுக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து அண்மையிலேயே வழங்கப்பட்டது.

இதன் பிரகாரம் அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கிய தேசிய பதிவில் திருநங்கைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என புதிய சட்டம் வலியுறுத்துகிறது.

மாலிக் இக்பால் என்ற மேற்படி நபருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், திருநங்கை என்று அறியாமலேயே அப்பெண்ணை திருமணம் செய்ததாக தெவித்தார்.

அந்த திருநங்கையின் பெயர் “ராணி சங்கீதா' என்பது மட்டுமே தனக்குத் தெரியும் என அவர் கூறினார்.

““நாங்கள் இருவரும் பிறந்தநாள் வைபவ மொன்றிலேயே சந்தித்தோம். எமக்கு திருமணம் செய்யும் எண்ணம் ஆரம்பத்தில் இருக்கவில்லை'' என்று அவர் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல