சனி, 29 மே, 2010

பாவனையாளர்கள் மூவர் உயிழந்ததால் கைவிடப்பட்ட தொலைபேசி எண்

The body of Konstantin Dimitrov, shot in Amsterdam in 2003. He was just one of the unlucky holders of mobile number 0888 888 888


10 வருட காலப் பகுதியில் கையடக்கதொலைபேசி எண்ணொன்றின் பாவனையாளர்கள் மூவர் அடுத்தடுத்து உயிரிழந்ததையடுத்து அந்த எண் கைவிடப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பல்கேரிய தொலைபேசி எண்ணான 0 888 888 888 என்ற எண்ணே கைவிடப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி எண்ணின் முதலாவது பாவனையாளரான கையடக்கத் தொலைபேசி நிறுவனமொன்றின் முன்னாள் தலைமை நிறைவேற்றதிகாரியான விளாடிமிர் கிரஷ்னோவ் ( Vladimir Grashnov), 2001 ஆம் ஆண்டு தனது 48 ஆவது வயதில் புற்றுநோய் காரணமாக மரணமானார்.

அவரது வர்த்தக எதிராளி வானொலி கதிர்ப்பு விஷத்தை பயன்படுத்தி அவருக்கு புற்று நோயை ஏற்படுத்தியதாக வதந்தி பரவியது.

இதனையடுத்து, மேற்படி தொலை பேசி எண்ணை உபயோகித்த பல்கேரிய பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் கொன்ஸ்டான்டின் திமித்ரோவ் ( Konstantin Dimitrov) 2003 ஆம் ஆண்டில் நெதர்லாந்து பயணத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

தொடர்ந்து சோபியாவைச் சேர்ந்த வர்த்தகரான கொன்ஸ்டான்டின் திஷ்லியவ் (Konstantin Dishliev)உணவகமொன்றுக்கு வெளியே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல