சனி, 3 ஜூலை, 2010

தமிழுக்கு வருகிறார் திவ்யா

ஜீவாவுடன் திவ்யா நடிக்கும் சிங்கம் புலி படத்தின் படப்படிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இந்த திவ்யா கன்னடத்தின் சூப்பர் ஸ்டாரினி என்பதும் தீவிர கன்னட பற்றாளினி என்பதும் ரசிகர்கள் அறிந்ததே. காவிரி பிரச்சினைக்காக தமிழ் திரையுலகம் கூடி உண்ணாவிரதம் இருந்த போது இவர் பெங்களூரில் தண்ணீர் தராத கோஷ்டியுடன் உண்ணாவிரதம் இருந்தவர். இவரை நடிகர் சங்கத்திலிருந்தே நீக்க வேண்டும். இவரது படங்கள் வெளியானால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றெல்லாம் சில லெட்டர் பேட் கட்சிகள் அறிக்கை வெளியிட்டதும் மக்களுக்கு நன்கு நினைவிருக்கலாம்.

ஆனால் தமிழனின் சுரணை மேல் தீராத நம்பிக்கை வைத்திருக்கும் திவ்யா எவ்வித அலட்டலும் இல்லாமல் பல தமிழ் படங்களில் நடிக்க முனைப்பு காடடி வருகிறார். அதில் ஒன்றுதான் இந்த சிங்கம் புலி இதன் படப்பிடிப்புக்கு வந்திருந்த அவரை பேட்டி காண முண்டியத்துக் கொண்டு கிளம்பினார்கள் சில முன்னணி செனல்காரர்கள் கேமிரா சகிதம் இவர்கள் கூடியதை பார்த்த திவ்யா, நான் தமிழ் பத்திரிகைகளுக்கும் சேனல்களுக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்ற முடிவிலிருக்கிறேன். வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் என் மேனேஜரை கேளுங்கள் என்றார்.

அவங்க சுதந்திரத்தில் நான் எப்படி தலையிட முடியும் என்றார். மேனேஜர் கடைசியில் திவ்யாவின் பிடிவாதமே வென்றது என்பதை சொல்லவும் வேண்டுமா?
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல