தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஆவியுலகில் பிறப்பவைகள் பல்வேறு முறைகளைக் கையாள்கின்றன. இதனால் கல்விமான்களும் புத்திஜீவிகளும் மிகவும் அவதானத்துடன் செயல்படுவதுடன் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். சில பேய்கள் தங்கள் தேவைகளுக்காக பெளத்த நாடுகளுக்கு செல்வதுண்டாம். அவ்வாறு ஏற்பட்ட சம்பவமொன்றிது.
பிரேஸில் நாட்டவரான ‘ஹெரிகோ’ சாதாரண விவசாயியாவார். இவர் மூன்றாம் வகுப்புவரை கற்றிருந்தாலும் பிற்காலத்தில் அந்நாட்டின் பிரபல்யமிக்கவராயும் முக்கியஸ்தர்களின் பெயர்ப்பட்டியலில் இவரும் அடங்கியிருந்தார். இதற்குக் காரணம் உடலிலேற்படும் கட்டிகள், கண் நோய்களுக்கு எவ்வித மருந்துவகைகளும் உபயோகிக்காது ஆவியின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்துவதால், ஆவியுதவி சிகிச்சை மூலம் எந்தளவு இவர் பிரசித்தமடைந்திருந்தாரென்றால் பிரேஸில் நாட்டு ஜனாதிபதியொருவர் ஹெரிகோவிடம் சிகிச்சை பெற்று சுகமடைந்ததாகும். ஹெரிகோ பற்றிய முழு விபரங்களையும் ‘ஹெரிகோ’ என்ற பெயரில் சர்வதேச தொலைநகல் மூலம் பெறலாம். இவர் 1974ம் ஆண்டு திடீர் விபத்தொன்றில் காலமானார்.
பிரேஸில் நாட்டவரான ஹெரிகோவின் ஆவி சில தினங்களுக்கு முன் திடீரென எதுல்கோட்டை, அலகேஷ்வர வீதியிலுள்ள ஆவிகள் சம்பந்தமான ஆராய்ச்சி மத்தியஸ்தானத்தில் தோன்றியது. அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த யோகிகளின் முன்னால் வெள்ளை உடையில் காணப்பட்ட ஹெரிகோவின் ஆவி கழுத்தில் ஆபரணமும் காதுகளில் பெரிய கடுக்கனும் அணிந்திருந்தது. பரந்த முகத்துடன் காணப்பட்ட ஆவியுடன் ஆராய்ச்சியாளர் ‘கசுன் நாகொட விதான’ உரையாடினார்.
“திடீரென எங்கள் முன் தோன்றிய நீர் யார்” “நான் ஹெரிக்கோ” “நீர் இலங்கையரா” “இல்லை நான் பிரேஸில் நாட்டில் வாழ்ந்தவன். 1974ம் ஆண்டு திடீர் விபத்தொன்றில் இறந்தேன். உம்மிடமுள்ள விசேட தன்மையென்னவென்று வினவிய போது “நான் பிரேஸிலில் வாழ்ந்த போது நோயாளிகளை சுகப்படுத்தினேன். ‘அவ்வாறெனில் நீர் வைத்தியரா” ‘இல்லை நான் ஒரு விவசாயி” “விவசாயியான நீர் வைத்தியம் செய்வதற்கான உம்மிடமுள்ள தகுதியென்ன” “ஹெரிகோவான என் உடலில் பிரபல வைத்தியரொருவரின் ஆத்மா குடிகொண்டிருப்பதால் என்னால் வைத்தியம் செய்ய முடிந்தது” என்றது ஆவி. இப்போது எங்கிருக்கிaர். ‘வானத்தில்’ இங்கு வந்ததற்கான காரணம், பல தகவல்களை சொல்ல அத்துடன் உங்களிடம் உதவியையும் எதிர்பார்க்கிறேன்.” “உமக்கு என்ன உதவி தேவை சொல்லும். “நேரடியாக என்னால் வர முடியாது தகுதியான ஒருவர் மூலம் வருகிறேன் எனக் கூறிய ஆவி மறைந்தது. மறுநாள் எதுல்கோட்டையிலுள்ள ஆவிகள் சம்பந்தமான ஆராய்ச்சி செய்யும் மத்தியஸ்தானத்திற்கு விசேடமான ஒருவர் வந்தார். இவர் ஸ்ரீலங்கா சர்வகலாசாலையொன்றின் பேராசிரியராவார். அவர் பேசினார்.
“நேற்றிரவு தியானத்திலிருந்த போது கண்ணுக்குத் தெரியாத உலகிலிருந்து எமக்கு ஆவி செய்தியொன்று கிடைத்ததால் நாகொடவிதான அவர்களைத் தேடி வந்ததாக பேராசிரியரின் உடலிலுள்ள ஹெரிகோவின் ஆவி பேசியது. பேராசிரியரின் உடலிலுள்ள ஆவி பல கடதாசிகளில் விபரங்களை எழுதிய வண்ணமிருந்தது. கடதாசி அசையவில்லை. ஆனால் பேனா முனை எழுதியது. கேட்கும் கேள்விகளுக்கு பதிலை எழுதியது. ‘எழுதுவது யாரென’ கேட்கும் போது, நான் பிரேஸில் இன ஹெரிகோ. “உமக்கு வைத்திய சிகிச்சை செய்வதற்கான அறிவு எவ்வாறு கிடைத்தது. “இரண்டாம் உலக யுத்தத்திலிருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வைத்தியரான ‘ஜோன் ஸ்மித்’ அவரிடமுள்ள ஆன்ம சக்தியின் மூலம் கட்டிகளையும் கண் நோய்களையும் சுகப்படுத்தி வந்தார். இவரிடம் புண்ணியங்கள் குறைவாயிருந்ததால் என்னிடம் நோயாளிகளை அனுப்பி என் மூலம் சுகம் பெறச் செய்து நன்மைகள் தேடி உயர் நிலையடைந்தார்” என்றது ஆவி.
“அவர் எவ்வாறு உம்முடன் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்” என கேட்ட போது
“வைத்தியர் ஜோன் ஸ்மித் என்னைத் தேடி வந்தார். அவருடைய வேண்டுகோளை நான் ஏற்கவில்லை முடியாதென்றேன். அவரை நான் புறக்கணித்ததால் அவர் செய்த தீமைகள் திசைதிரும்பி நன்மைகள் மூலம் அவர் உயர்வடைந்தார்” என்றது ஆவி.
“ஹெரிகோ உம்முடைய இப்போதைய நிலையென்ன” “தீமைகள் மூலம் கிடைக்கும் தண்டனை நன்மைகள் மூலம் கிடைப்பவைகள் இரண்டையும் அனுபவிக்கின்றேன். சில நேரங்களில் நான் கீழ் மட்ட நிலையிலுள்ள பேயாகவும், சில வேளைகளில் தெய்வ நிலையிலுமுள்ளேன். இந்நிலையிலிருக்கும் போது உங்களைத் தேடி வந்தேன். என்னை ஆசிர்வதியுங்கள். எனக்கு உதவி செய்யுங்கள், என் கஷ்டநிலையிலிருந்து விடுபட உதவுங்கள்” என்றது ஆவி.
“நீர் இலங்கைக்கு எப்படி வந்தீர். எம்முடனான தொடர்பு எவ்வாறேற்பட்டது என்று கேட்ட போது
“தெடி முண்ட தேவி மதகுரு வின் உதவியுடன் இங்கு வந்தேன்” என்றது பேய்.
“ஹெரிக்கோ, கடந்த காலத்துக்கு உம்முடைய மனதை செலுத்தி பிரேஸிலில் நீர் வாழ்ந்த போது செய்த நன்மையானவைகளை, மனிதருக்கு செய்த உபயோகமானவைகளை நினைவு கூரும் வைத்தியர் ஜோன் ஸ்மித்தின் ஆவிச்சக்தியுடன் உம் கைகளினால் சுகப்படுத்திய நோயாளிகளைப் பற்றி சிந்தியும் அந்நன்மைகளை மனதில் ஏற்றுக்கொள்ளும் என்ற ஆலோசனையை வழங்கியதுடன், ஹெரிகோவின் ஆவி உயர் நிலையையடைந்தது. இவர் பிரேஸிலில் வாழும் காலத்தில் போதியளவு கல்வியறிவை பெற்றிருக்கவில்லை. இதனால் இவர் செய்யும் உதவிகள் பிற்காலத்தில் பயன்தருமென அவர் அனுமானிக்கவில்லை. ஆராய்ச்சி மத்தியஸ்தானத்தில் பேய்க்கு நன்மையின் பலனை விளக்கிய போது அதனை ஏற்றுக்கொண்டதால் இப்பேய் உயர் நிலையையடைந்தது.
தற்போது ஹெரிகோ தேவசபைக்கு செய்திகள் கொண்டு செல்லும் தேவதூதனாக செயல்படுகிறார். ஆராய்ச்சி மத்தியஸ்தானத்துக்கு வரும் நோயாளிகளை சுகப்படுத்த உதவுகிறார். தேவியர்களிடம் தகவல்கள் கொண்டு செல்வதால் நன்மைகளை தேடிக்கொள்கிறார்.
கலியுகத்தில் மனிதர்களுக்கு மூன்று விதமான மரணங்கள் ஏற்படுகின்றன. இயற்கை மரணம், விபத்துக்களினால் ஏற்படும் மரணம், ஆவிகளினால் ஏற்படும் மரணங்களாகும். இலஞ்சம், மோசடி, களவு, அரச உடமைகளை கொள்ளையடித்தல், போதை பொருள், மது, கொள்ளைகளின் அளவு அதிகரிக்கும் போது தேவியர்கள் அகன்று ஆவிகளின் சேனாதிபதியின் நடவடிக்கை தொடர்கிறது.
ஆவிகள், மரணங்கள், ஆவியுலகம் பற்றி ஊடகவாயிலாக அறிவிக்கும் போது கல்விமான்கள் அவை பற்றி விசாரிக்கின்றனர். இவை சம்பந்தமான கலந்துரையாடலொன்று 2010ம் ஆண்டு மேமாதம் இருபத்தோராம் திகதி வெள்ளிக்கிழமை பேராதெனிய சர்வகலாசாலை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்விமான்கள் கலாநிதிகள், பேராசிரியர்கள், பெளத்த குருமார் நூறிலிருந்து நூற்றி இருபதுக்கு இடைப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நில்லம்ப தியான மத்தியஸ்தானத்தின் பேச்சாளர் உபுல் கமகே, எதுல்கோட்டை ஆவிகள் சம்பந்தமான ஆராய்ச்சியாளர் கசுன் நாகொடவிதானவும் கலந்து கொண்ட இக்கலந்துரையாடல் வைபவத்துக்கு சர்வகலாசாலை பெளத்த பிரிவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பி. டி. பிரேமசிறி தலைமை தாங்கினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக