பாப் இசை உலகில் புகழ் பெற்று விளங்கிய மைக்கேல் ஜாக்ஸன் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு விட்டிலிகோ (Vitiligo) எனப்படும் தோல் வியாதி இருந்தது எனவும், அதன் காரணமாகவே அவரது உடலின் நிறம் பொலிவு பெற்று வந்தது எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜாக்ஸனின் 13 வயது மகன் பிரின்ஸ் மைக்கெலுக்கும் (Prince Michael) இதே போன்ற நோய் இருப்பது தெரியவந்துள்ளது. ஹவாய் தீவில் தனது சகோதரர் பிளாங்கெட் (8) மற்றும் சகோதரி பாரிஸ் (12) ஆகியோருடன் விடுமுறையைக் கழிக்க சென்றபோது பிரின்ஸுக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்தது.
அவரது கையில் வெண் படலம் போன்று தோன்றியிருந்தது கண்டறியப்பட்டது. சாதாரணமாக வெயிலால் ஏற்படும் வெண் படலத்திற்கும், இதற்கும் நிறைய வித்தியாசம் காணப்படுகிறது என்று டெய்லி மெயில் ஆன்லைன் தெரிவித்துள்ளது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக