‘எந்த மனிதரை கொன்றால் எவ்வளவு பரிசு?’
இப்படியெல்லாம் கொட்டை தலைப்பில் நாளிதழில் நீங்கள் செய்தி படிக்க நேரிட்டால்... நிச்சயம் அது அல்கய்தாவின் ஆங்கில நாளேடாக இருக்கும்.
ஆம். சர்வதேச தீவிரவாதி ஒசாமா, அவனது பரந்து விரிந்த அக்கிரம அமைப்பு அல்&கய்தாவுக்காக ஏமனில் ஆங்கில நாளேடு தொடங்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டின் அல்&கய்தா பிரிவு இதை நடத்துகிறது.
ஆங்கிலம் பேசும் அமெரிக்க, ஐரோப்பியவாழ் அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாத செயலுக்கு அழைப்பதே அதன் நோக்கமாம். இந்த நாளிதழின் ஆன்லைன் பதிப்பு சமீபத்தில் இலவசமாக வெளியிடப்பட்டது. நாளிதழின் பெயர் ‘இன்ஸ்பைர்’. ஏமன் நாட்டை சேர்ந்த அன்வர் அல் அவ்லாகி அதன் ஆசிரியர் குழு தலைவர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக