சனி, 3 ஜூலை, 2010

இலங்கை மெலிபன் பிஸ்கட்ஸ் கம்பனிக்கு உலகின் முதல்தர விருது

60 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பு மெலிபன் வீதியில் எளிமையான தேநீர்க் கடையாக ஆரம்பிக்கப்பட்ட ‘மெலிபன் பிஸ்கட் கம்பனி’, உலகின் முதற்தர விருதை தனதாக்கிக் கொண்டுள்ளது.

80 நாடுகளின் 902 உற்பத்திகளுடன் போட் டியிட்டு மெலிபன் கம்பனி இம்முதல் விருதை வெற்றி கொண்டுள்ளது.

இலங்கையில் முதற்தர பிஸ்கட் உற்பத்தியா ளர்களான மெலிபன் பிஸ்கட்ஸ் உற்பத்தி (தனி) லிமிட்டட் நிறுவனம் பெல்ஜியம் தலைநகரான பிறஸல் நகரிலுள்ள சர்வதேச சுவை மற்றும் தர நிறுவனத்தின் (ITQi) “Superior Taste Award 2010” இனை சொக்ளேட் கிறிம் பிஸ்கட், கோல்ட் மாறி மற்றும் கிaம் கிறேக்கர் ஆகிய மூன்று தயா ரிப்புக்களுக்காகவும் பெற்றுக் கொண்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் தரம் மற்றும் சுவைக் குப் பெயர் பெற்றுக் கொண்டுள்ள உலக அங்கீகாரம் பெற்ற யிஹிஙிi விருதினை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை முதன்முதலில் தட்டிக் கொண்டது இலங்கை மெலிபன் நிறுவ னமாகும்.

பல வருடங்களாக மலிபன் நிறுவனம் உலகில் முதற்தரமான இணையற்ற உற்பத் திகளை வழங்கிக் கொண்டு வந்துள்ளது. கைத்தொழில் முன்னோடியாகிய மெலிபன் நிறுவனமே 1995ல் ISO 9001:2000 அங் கீகாரம் மற்றும் 1996ல் தேசிய தர விருது களைப் பெற்ற இலங்கையின் முதலாவது பிஸ்கட் உற்பத்தி நிறுவனமாகும்.

அதிசிறந்த சுவைமிக்க நுகர்வு உணவுப் பொருட்கள் மற்றும் பான வகைகளைப் பரீட் சித்து தரமுயர்த்துவதில் உலகிலேயே முன் னோடியாகத் திகழும் சுதந்திரமான சமையல் கண்காணிப்பாளர்களைக் கொண்ட நிறுவ னமாக யிஹிஙிi நிறுவனம் தன்னை அர்ப்பணித் துள்ளது. உலகில் முதன்மையான தரம் மற்றும் சுவை உணவுகளை விநியோகத்தர்களும் நுகர்வோர்களும் கண்டறிவதற்கான ஒரு பலம் வாய்ந்த கருவியாக இது தொழிற்படுகிறது.

பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல், ஸ்பெ யின் போன்ற நாடுகளிலுள்ள புகழ்பெற்ற ஐரோப்பிய சமையற் சங்கங்களையும் மற்றும் டிலா சோமலியர்ஸ் சர்வதேச சங்கத்தையும் சேர்ந்த சமையல் கண்காணிப்பாளர்களும் குடிபான நிபுணர்களும் யிஹிஙிi மத்தியஸ்தக் குழுவில் அடங்குவர். அதிசிறந்த சுவை மற்றும் தரத்தினை கண்டிப்பாக மதிப்பீடு செய்து செய்துவரும் நடைமுறைக்காக ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைகள் பெல்ஜியம் பொருளாதார விவகாரங்கள் மற்றும் சந்தை நிறுவனங்களுக்கான அமைச்சினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

70 சதவீதத்திற்கு மேற்பட்ட புள்ளிகளைக் கொண்ட உற்பத்திகளுக்கு “Superior Taste Award” வழங்கப்படுகிறது.

இவ்வருட விருது வழங்கலுக்காக அவுஸ்தி ரேலியா, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியம் அடங்கலாக 80 நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 902 உற்பத் திகள் பரீட்சிக்கப்பட்டுள்ளன.

60 ஆண்டுகளுக்கு முன்னர் மெலிபன் வீதி யில் ஒரு எளிமையான தேநீர்க்கடையுடன் ஆரம்பித்து தற்போது ஒரு முன்னணி வாய்ந்த பிஸ்கட் உற்பத்தியாளராகவும் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் சிறந்த உற்பத்திகளுக்கான அங்கீகாரம் பெற்ற ஒரு ஸ்தாபனமாகவும் திகழ்கிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல