புதன், 11 ஆகஸ்ட், 2010

அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

இவர் பயன்படுத்திய பொருட்களை கோடிக் கணக்கில் பணம் செலுத்தி வாங்கும் ரசிகர்கள்

சுமார் அரை நூற்றாண்டுகள் கடந்தும் கூட முழு உலகையும் அழகால் வசப்படுத்திய ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் மவுசு குறைந்ததாக தெரியவில்லை. அவரின் மரணத்திற்கான மர்மம் இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை.

1962 ஆகஸ்ட் 5 ஆம் திகதியே இவரின் மரணம் சம்பவித்தது.

ஆனால் 5 தசாப்தங்கள் கடந்தும் கூட அவரின் புகழ் குறையாமலே இருக்கிறது. அவர் பாவித்த பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதன் மூலம் இது புலனாகிறது. நடிகை மர்லின் மன்றோ பயன்படுத்திய ஆடை ரூ. 1.5 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஏல விற்பனையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பயன்படுத்திய 1500 முக்கிய பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

அதில் மறைந்த ஹொலிவுட் நடிகை மர்லின் மன்றோ அணிந்திருந்த பிங்க் நிற கவுன் ரூ. 1 கோடியே 47 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது.

இந்த கவுனை அவர் ‘ஜென்டில்மென் பிரிபெர் பிலாண்ட்ஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சியில் அணிந்து நடித்தார். இது தவிர 1950 ஆம் ஆண்டு நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1.9 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த படக் காட்சி வெறும் 15 நிமிடங்களை கொண்டதாம்.

1947 முதல் மர்லின் மன்றோ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் அல்லல் உற்றார். இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது.

கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது பெயர் ஜோன் எஃப் கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல