இந்த வகையில் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு ஆசையே மிதக்கும் நகரத்தை (Floating City) உருவாக்குதல். அதாவது, இராட்சதக் கப்பலொன்றில் ஒரு நகரத்தை நிர்மாணித்து, அங்கு மக்களைக் குடியேற்றி அந்த நகரத்தையே உலக வலம்வரச் செய்தல் ஆகும்.
பொதுவாக நீர்ப் பரப்பினுள்ளே தூண்களை எழுப்பி அத்தூண்களின் மீது குடியிருப்புக்களை நிர்மாணிக்கும் போது, அக்குடியிருப்புக்களையும் மிதக்கும் நகரம் என்று செல்வதுண்டு. ஆனால், கப்பலில் நிர்மாணிக்கப்படும் இந்த மிதக்கும் நகரத்தில், ஒரு நகரத் திற்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களும் காணப்படும்.
நகரின் குடியிருப்பாளர்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காக நகரைவிட்டு வெளியே வரவேண்டிய தேவையே இருக்காது. அதற்கேற்றாற்போல் இந்த மிதக்கும் நகரம் வர்த்தக மையங்கள், பாடசாலை, வைத்தியசாலை, போக்கு வரத்துக் கட்டமைப்புக்கள், விமான நிலையங்கள் என அனைத்து வசதிகளை யும் தன்னகத்தே கொண்டிருக்கும்.
இந்த மிதக்கும் நகரத்தினைக் சாதா ரண பயணிகள் உல்லாசக் கப்பல்களு டன் ஒப்பிட முடியாது. சாதாரண பயணிகள் உல்லாசக் கப்பல்கள் அளவு, பயணிகள் கொள்ளளவு மற்றும் பயன்பாடு என்பவற்றில், இந்த மிதக்கும் நகரத்திலிருந்து பாரியளவில் மாறுபட்டுக் காணப்படுகின்றன. ஏறக் குறைய 1300 மீற்றர் நீளமும் 200 மீற்றர் அகலமும் கொண்ட இந்த மிதக்கும் நகரம் கடலின் மேற்பரப்பிலிருந்து 100 மீற்றர் அளவுக்கு உயரத்தையும் கொண்டது. அதாவது, கிட்டத்தட்ட 25 மாடிகள் உயரம் கொண்டது.
இந்த மிதக்கும் நகரக் கப்பலின் அடிப்பாகத்தின் உட்பகுதி 520 காற்றிறுக்க வளியறைகளாகப் (airtight cells) பிரிக்கப்பட்டு தடித்த உருக்கினால் காப்பிடப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் நகரக் கப்பலின் உந்து சக்தி, ஒவ்வொன்றும் 3700 குதிரை வலு சக்தியை வழங்கவல்ல 100 டீசல் இயந்திரங்களின் மூலம் வழங்கப்படு கின்றது. இவ்வியந்திரங்கள் பெறுமதி யானவை எனக் கணிக்கப்பட்டுள்ளன.
இந்த மிதக்கும் நகரம் ஏறக்குறைய 60000 குடியிருப்பாளர்களுக்குரிய 17000 குடிமனைகளைக் கொண்டி ருக்கும். கப்பல் சிப்பந்திகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் களுக்காக கல்வி மற்றும் ஏனைய வசதிகள் கப்பலிலேயே வழங்கப்படும். கப்பலின் குடியிருப்பாளர்கள் கப்பல் நகர நிர்வாகத்திற்கென தனியான வரிகள் எதுவும் கட்ட வேண்டியிராது என்ற போதிலும் அவர்கள் தமது சொந்த நாட்டில் கட்டும் வரிகளைத் தொடர்ந்து கட்ட வேண்டும்.
இந்தக் கப்பலில் உணவு விடுதிகள், திரையரங் குகள், களியாட்ட விடுதிகள் என அனைத்து வகையான பொழுதுபோக்கு அம்சங் களும் காணப்படுவதுடன் ஒவ்வொரு குடியிருப்பும் செய்மதி தொலைக்காட்சி வசதியினையும் இணைய வசதியினை யும் கொண்டிருக்கும். அவை தவிர இந்த நகரக் கப்பல் தனியானதொரு பாது காப்பு சேவையினையும் (Security Service) கொண்டிருப்பதுடன் நவீன வசதிகளுடன் கூடிய கண்காணிப்பு கருவிகளையும் கொண்டிருக்கும்.
அத்துடன் கப்பலின் அடிப்பகுதியில் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் ஒரு தொழிற்கூடத்தினையும் கொண்டிருக்கும். இத்தொழிற் கூடத்தில் கழிவுப் பொருட் களிலிருந்து மின்னுற்பத்தி செய்தல் மற்றும் பொருட்களை மீள்சுழற்சி செய்தல் போன்ற தொழிற்பாடுகள் இடம் பெறும். இவ்வாறானதொரு கப்பலின் ஒவ்வொரு செயற்பாடுமே பெரும்பொருட் செலவை ஏற்படுத்த வல்லன.
எனவே, இவ்வாறான குடியிருப்புக்கள் பெரும் கோடீஸ்வரர்களுக்கே பொருத்தமானவை யாக காணப்படும். பெருந்தொகைப் பண முதலீட்டில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான திட்டங்கள் நிச்சயமாக சாதாரண மக்களுக்கு வாழ்நாள் கனவே! ஆம்; நிஜத்தில் அவர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாத கனவு எனினும் அது பற்றி அறிந்து வைத்திருப்பதில் நட்டம் எதுவுமில்லையே!




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக