புதன், 11 ஆகஸ்ட், 2010

மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள்

மேலைத்தேய நாடுகளில் மனிதர்களை விட செல்லப் பிராணிகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். செல்வந்தர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற பிராணிகள் மிகவும் சொகுசாகவே வளர்க்கப்படுகின்றன. சில செல்வந்தர்கள் தமது சொத்துக்களைக் கூட செல்லப் பிராணிகளுக்கு எழுதி விடுவதுண்டு.

சீனாவில் நாய்களுக்கென அலங்கார நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் பெருமளவு நாய்கள் அலங்காரம் செய்வதற்காக அழைத்து வரப்பட்டுகின்றன. இங்கு நாய்களின் முடியில் வர்ணம் பூசுவது குளிப்பாட்டுவது என்பன செய்யப்படுகிறது.

ஆயிரம் டாலர் (ஒரு இலட்சத்து 15 ஆயிரம்) செலுத்தி அட்டையொன்றைப் பெற்று இங்கு நாய்களை அலங்கரிக்க முடியும்.

இது இப்படியிருக்க அரச குடும்பத்தைச் சேர்ந்த கயில் பொஸ்னர் எனும் மூதாட்டி தனது சொத்தில் 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை தனது மூன்று செல்ல நாய்களுக்கு உயிர் எழுதியுள்ளார். தனது ஒரே மகனுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களையே எழுதியுள்ளார் பொஸ்னர். இவர் கடந்த மார்ச் மாதம் இறந்தார்.

தாயின் செயலால் கோபமுற்ற அவரின் மகன் பிரேட்கார் சகல சொத்துக்களும் தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று கூறி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

தனது தாய் புற்று நோய்க்கு மருந்து பாவித்ததாகவும் அதனால் மன நிலை பாதிக்கப்பட்டே தனது செல்லப்பிராணிகளுக்கு பெருமளவு சொத்துக்களை எழுதியிருப்பதாக அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். தனது தாயை தவறாக வழிநடுத்திய அவரின் ஊழியர்களே இவ்வாறு நாய்களுக்கு சொத்தெழுத வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கயில் பொஸ்னர் தனது நாய்கள் மீது அதிக அளவு அன்பு செலுத்தினாராம். எந்தளவு என்றால் இந்த நாய்களின் கழுத்தில் பல இலட்சம் பெறுமதியான இரத்தின மாலைகள் கூட போடப்பட்டுள்ளன. 15 ஆயிரம் டொலர் பெறுமதியான மாலை ஒவ்வொரு நாய்க்கும் இடப்பட்டுள்ளனவாம். இது தவிர தனது வேலையாட்களுக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை பொஸ்னர் எழுதி வைத்துள்ளாராம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல