புதன், 11 ஆகஸ்ட், 2010

தெரிந்து கொள்வோம்

ஃ வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே தூங்கும்.

ஃ ரொபின் இனப் பறவை பாடிக்கொண்டே தூங்கும்.

ஃ பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டே கூட தூங்கும்.

ஃ டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டே தூங்கும்.

ஃ மனிதனால் மட்டுமே முதுகை பூமியில் படும்படி படுத்துத் தூங்க முடியும்.

ஃ வரிக்குதிரை நின்று கொண்டே தூங்கும்.

ஃ மாடுகள், ஓட்டகங்கள் அசை போட்டுக்கொண்டே தூங்கும்.

ஃ கோழிகள் நின்று கொண்டே தூங்கும்.

ஃ மனிதனால் கண்களை பாதி திறந்து கொண்டே தூங்க முடியாது.

ஃ கோழிகளால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே கூட தூங்கி விழிக்க முடியும்.

ஃ குரங்குகள் மரத்தில் தொங்கிய படியே தூங்கும்.



சத்தங்கள் பொதுவானதா?

வெட்டுக் கிளிக்கும் திமிங்கலத்திற்கும் எந்த சொந்த பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஒன்று பூச்சியினம் மற்றது பாலூட்டி. ஆயினும் இரண்டும் விலங்குகளே. இரண்டும் சத்தம் எழுப்பிப் பேசிக் கொள்கின்றன. அப்படிப் பார்க்கப் போனால் ஏராளமான விலங்ககுகளுக்குள் தகவல் பரிவர்த்தனை சத்தம் மூலமாக தான் நடைபெறுகிறது.

ஃப்ளோரிடா பல்கலைக்கழகமும் ஒக்லஹாமா பலக்லைக்கழகமும் இணைந்து 500 வகையான விலங்கு சத்தங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தன. மேம்போக்காகப் பார்க்கும் போது அவற்றிடையே நிறைய சுருதி பேதங்களும் தாள வித்தியாசங்களும் காணப்பட்டாலும் விலங்கின் உருவ அளவு மற்றும் அதன் எடைகளில் காணப்படும் வித்தியாசங்களை ஒன்றுபடுத்திப் பார்க்கும் போது அனைத்து விலங்குகளின் ஓசைகளும் அதன் சங்கேதங்களும் ஒன்று போலவே இருந்ததைக் கண்டு வியந்தனர். அடிப்படையாக எல்லா விலங்குகளின் பாஷைகளுக்குள்ளும் ஒருவித சத்த ஒற்றுமை இருக்கிறது. வெளிப்படையாக அவை விகாரப்பட்டாலும் ஆழமான ஒற்றுமை சூக்குமமாக உள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல