வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பிள்ளைகளை மரப்பெட்டியில் 10 மணி நேரம் அடைத்து வைத்த தாய்

நண்பியின் வீட்டிற்கு செல்லும் முகமாக தனது 5 பிள்ளைகளையும் 10 மணி நேரம் மரப்பெட்டியொன்றில் அடைத்து வைத்து, அந்த பிள்ளைகளில் இருவர் உயிழப்பதற்கு காரணமாயிருந்த தாயொருவர் கைது செய்யப் பட்ட சம்பவம் அமெரிக்க இன்டியானா பொலிஸில் இடம்பெற்றுள்ளது.

சோமாலியாவை பிறப்பிடமாகக் கொண்ட எடியன் பராஹ் (28 வயது) என்ற மேற்படி பெண், நண்பியின் வீட்டுக்குச் செல்லும் முகமாக 6 அடி நீளம் 18 அங்குல உயரடைய மரப் பெட்டியில் தனது 5 பிள்ளைகளையும் அடைத்த வைத்துள்ளார்.

அவர் மேற்படி மரப்பெட்டியின் பக்கக் கதவை சிறுவர்கள் திறந்து வெளியேறாத வகையில் பாரமான கட்டி லொன்றை அதன் முன்பாக நகர்த்தி வைத்துள்ளார்.

அதன் பின் நண்பியின் வீடு சென்று அவரது குடும்பத்தவர்களுடன் பொழுதைக் கழித்து விட்டு 10 மணித்தியாலத்திற்கு பின் எடியன் பராஹ் வீடு திரும்பி யுள்ளார்.

அவர் மரப்பெட்டியை திறந்த போது, அவரது மகளான ஸு ஹுர் (5 வயது) மற்றும் மகனான ஸகாயா (3 வயது) ஆகியோர் விறைத்துப் போய் எதுவித அசைவுமின்றி இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் எடியன் பராஹ், அப்பிள்ளைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க அவ சர சேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுக்காமல் அவர்களை கீழ் தளத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார். இதனையடுத்து அயலவர்கள் கொடுத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்தை முற்றுகையிட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்ட 7 வயது மகளும் 5 வயது மற்றும் ஒரு வயதுடைய மகன்மா ரும் சிறுவர் பராமரிப்பு பிரிவினடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளனர்.

மரப்பெட்டியில் அடைக்கப்பட்ட இரு பிள்ளைகளும் எவ்வாறு உயிழந்தார்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

எடியன் பராஹ்ஹின் குடும்பமானது ஒரு தசாப்த காலத்திற்கு முன்னர் சோமாலியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எடியன் பராஹ்ஹின் கணவர் தனது பெற்றோரைப் பார்க்க சோமாலி யா சென்ற வேளையிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல