வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆபியா சித்திக் (வயது 38) என்ற பெண் விஞ்ஞானியை கடந்த 2008-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ சோடியம் சயனைடு மற்றும் அமெரிக்காவில் முக்கிய இடங்களில் தாக்குதல் குறித்த சில குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அமெரிக்க புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ஒரு அதிகாரியின் துப்பாக்கியை பறித்து அமெரிக்க விசாரணை அதிகாரிகள் மற்றும் வீரர்களை அந்த பெண் சுட்டார். அதனால், அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, ஆபியாவை காப்பாற்ற பாகிஸ்தான் அரசு முயற்சி மேற்கொண்டது. அவருக்காக மூன்று வக்கீல்களையும் நியமித்தது.

இந்த சூழ்நிலையில், ஆபியா சித்திக் மீதான வழக்கில் அமெரிக்க கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. அப்போது, அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 12 ஆண்டுகளாக குறைக்குமாறு ஆபியா வக்கீல்கள் விடுத்த வேண்டுகோளை நீதிபதி நிராகரித்து விட்டார். ஆபியாவை காப்பாற்றி பாகிஸ்தானுக்கு கொண்டு செல்ல சட்ட ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல