M16 புலனாய்வுத்துறையின் தலமைக் காரியாலயம்
இங்கிலாந்து உளவு அமைப்பான `எம்16' சார்பாக ரகசிய ஆவண குறிப்புகளை எழுத மனிதனின் வியர்வை, விந்து உள்ளிட்ட திரவ கழிவுகளை மையாக பயன்படுத்திய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. முதலாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில், 1909-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரையிலான ரகசியக் குறிப்புகளை இதுபோன்று தான் `எம்16' உளவுப் பிரிவு அதிகாரிகள் எழுதி இருக்கின்றனர்.பிரான்சு தலைமையகத்தில் 1915-ம் ஆண்டு உளவுத் துறை துணைத் தலைவராக பணியாற்றிய வால்டர் கிர்கி என்பவர் தான் இத்தகைய புதிய யுக்தியை கண்டு பிடித்திருக்கிறார். ஆண்களின் விந்து தான் ரகசிய ஆவணங்களை எழுதுவதற்கு சிறந்த மையாக இருந்திருக்கிறது. அயோடின் கொண்டு கண்டு பிடிக்க முயற்சித்தாலும், எந்த எதிர்விளைவையும் விந்து காட்டாது. இந்த தகவல்களை, குயின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் கேத் ஜெப்ரி வெளியிட்டுள்ளார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக