வெள்ளி, 24 செப்டம்பர், 2010

காகிதத்தில் சிற்பம் செய்து..

யாரிடம் எந்த திறமை இருக்கும், அது எப்போது அவரிடம் இருந்து பூக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்கு ஓரு உதாரணமாக விளங்குகிறார் ரமேஷ்.

சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ். பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வசதி யில்லாததால், இப்போது கட்டுமான வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்.

இவர், தன் வேலை நேரம் போக, மிச்சம் இருக்கும் நேரத்தில் கிடைத்த காகிதத்தை வெட்டி, வெட்டி அலங்கார பூக்களை உருவாக்குவார். காலப்போக்கில் இவர் உருவாக்கிய அலங்கார காகித பூக்கள், பலரையும் கவரவே ஆயுத பூஜை காலங்களில் இவரது பகுதியில் இவர்தான் ஹீரோ. காகிதத்தை இரண்டாக, நான்காக மடித்து, பின் கத்திரியால் வெட்டி, பின் பேப்பரை பிரித்தால், வித்தியாசமான டிசைன் மற்றும் பூக்கள் உருவாக்குவதை பள்ளி நாட்களில் அப்போதும் சரி, இப்போதும் சரி, பலர் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். இவர், அதில் இருந்து எப்படி வித்தியாசப்படுகிறார் என்றால் இரண்டாக, நான்காக மடிப்பதுடன் கூடுதலாக வித்தியாசமாக காகிதத்தை மடித்து வெட்டுகிறார். அதுவும், இதுதான் அளவு என்று வைத்துக் கொள்ளாமல், பல வண்ண காகிதங்களை ஒட்டி, மெகா சைசுக்கு பெரிதாக உருவாக்கி, அந்த காகிதத்தில் இருந்து இவர் வெட்டி உருவாக்கும் டிசைன்களும், பூக்களும்தான் இவரை காகித சிற்பி என பலரையும் அழைக்க வைத்திருக்கிறது.

இந்த காகித சிற்பிக்கு இடையில் திடீர் சோதனையாக ஒரு விபத்தில் இடது கையின் மீது வண்டி ஒன்று ஏறி, இறங்க உள்ளங்கை எலும்புகள் எல்லாம் நொறுங்கிப் போயின; கூட இருந்தவர்களின் உள்ளங்களும் கூட. இனி, ரமேஷால் காகித சிற்பங்களை உருவாக்க முடியாதோ என்று.

ஆனால், நொறுங்கிப் போன கையையும் இப்போது தன் சாதனைக்கான கருவியாக்கி விட்டார். ஆம், இவரது இடது கையை ரப்பர் போல பின்பக்கமாக மடித்து மணிக்கட்டை தொடுவார். விபத்திற்கு பிறகு முன்னிலும் வித்தியாசமாக தன் படைப்பை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் உருவாக்கிய டிசைன்கள் மகளிர் சுய உதவி குழுவினரின் புடவைகளில், பலவிதமான பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் பாத்திரங்களில், டைல்ஸ் மற்றும் ஆடைகளில் பிரிண்ட்டாக இடம் பெற்று வருவது ஒரு நல்ல விஷயம். இதனால், காசு வராவிட்டாலும், நம் திறமை நாலு இடத்திற்கு போகிறதே என்ற ஆறுதல் இவருக்கு உண்டு. இப்போது இந்த காகித சிற்பியான ரமேஷின் கனவு எல்லாம் கிரிக்கெட் மைதானத்தின் அளவிற்கு காகிதத்தை ஒட்டி, அதில் வித்தியாசமான பூக்களை வெட்டி உருவாக்க வேண்டும் என்பதூன். இந்த ஏழை, எளிய, திறமைசாலியின் கனவு விரைவில் நனவா கட்டும்.


.எல். முருகராஜ்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல