வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பெண் பயிற்சியாளரை கொன்ற திமிங்கலம் ! (படங்கள் இணைப்பு)

பார்வையாளர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, பெண் பயிற்சியாளர் ஒருவரை திமிங்கிலம் ஒன்று தண்ணீருக்குள் இழுத்து சென்று, கடித்து, குதறி கொன்ற கொடூர சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

 புளோரிடா நகரில் பிரபலமான கடல் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களை குஷிப் படுத்த, பெரிய திமிங்கில மீனை வைத்து விளையாட்டு காட்டும் காட்சி தினமும் நடக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி இதே போன்ற காட்சி ஒன்று இந்த காட்சியகத்தில் நடந்தது. நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அரங்கில் குழுமியிருந்தனர். டான் பிரான்செயூ என்ற 40 வயது பெண் ஒருவர் தான், இந்த காட்சியகத்தில் திமிங்கில பயிற்சியாளராக உள்ளார்.

"திலிகும்' என பெயரிடப்பட்டுள்ள திமிங்கிலம் ஒன்றை வைத்து, இவர் தினமும் பார்வையாளர்களுக்கு விளையாட்டு காட்டுவது வழக்கம். கிட்டத்தட்ட 8,000 கிலோ எடை கொண்ட அந்த திமிங்கிலம், இந்த பெண் பயிற்சியாளரின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு விளையாடும். வழக்கம் போல் அன்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் முடிந்ததும், திமிங்கிலத்தை பயிற்சியாளர் டான் தண்ணீருக்குள் போக உத்தரவிட்டார். ஆனால், திடீரென அந்த திமிங்கிலம், டானை தண்ணீருக்குள் இழுத்தது. அந்த பெண்ணை கடித்து குதறி, தண்ணீருக்குள் அமுக்கியது. பார்வையாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். ஒரு சில வினாடிகளில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

இதே போன்று பயிற்சியாளரை இந்த திமிங்கிலம் கொல்வது இது மூன்றாவது முறை. இந்த சம்பவத்திற்குப் பின், இந்த கண்காட்சி கூடம் மூடப்பட்டு விட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல