திங்கள், 18 அக்டோபர், 2010

அபூர்வ தினங்களில் 3 குழந்தைகளை பிரசவித்து அமெரிக்க பெண் சாதனை (படங்கள் இணைப்பு)

அபூர்வ தினங்களில் மூன்று குழந்தைகளை பிரசவித்து அமெரிக்காவைச் சேர்ந்த பார்பரா சொப்பர் என்ற பெண்மணி சாதனை படைத்துள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சாதனை தொடர்பான செய்தி சர்வதேச ஊடகங்களில் சனிக்கிழமை வெளியாகியுள்ளது.
10.10.10 இல் பிறந்த குழந்தை

அமெரிக்க மிக்சிகன் மாநிலத்திலுள்ள ரொக்போர்ட் நகரைச் சேர்ந்த பார்பரா (36 வயது), தனது பெண் குழந்தையான சலோ வை 08.08.08 இல் பிரசவித்தார். அடுத்து ஆண் குழந்தையான கமெரோனை 09.09.09 இல் பிரசவித்தார். தொடர்ந்து சியர்ரா நிகோலி என்ற பெண் குழந்தையை 10.10.10 இல் பிரசவித்துள்ளார்.

இவ்வாறு தினம், மாதம், வருடம் என்பன ஒரே எண்ணிக்கையில் வரும் நாட்களில் பிள்ளைகள் மூவர் பிறப்பது 50 மில்லியன் பேரில் ஒரு தாய் என்ற வீதத்தில் இடம்பெ றும் அபூர்வ நிகழ்வாகும்.

மூன்று குழந்தைகளும் திகதி, மாதம் மற்றும் வருடம் என்பன ஒரே எண்ணில் வரும் நாட்களில் பிறந்தமைக்கு, மேற்படி பிள்ளைகளில் இரு பிள்ளைகள் உய பிரசவ காலத்திற்கு முன்கூட்டி பிறந்தமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சியர்ரா நிகோலி கர்ப்பத்திலிருந்த போது பார்பராவுக்கு காலில் ஏற்பட்ட நோய் காரண மாக அக்குழந்தையை முன்கூட்டியே பிரசவிக்க நேர்ந்ததாக கூறப்படுகிறது.

எனினும் தனது பிள்ளைகள் எவரையும் குறிப்பிட்ட அபூர்வ தினத்தில் பெற்றெடுக்க தாம் எதுவித திட்டமிடலையும் மேற்கொள்ளவில்லை எனவும் பிறப்புகள் எதேச்சையா கவே குறிப்பிட்ட தினத்தில் இடம்பெற்றன எனவும் பார்பரா தெரிவித்தார்.

பார்பராவும் அவரது கணவர் சாட்டும் (33 வயது) தமது நான்காவது குழந்தையை அடுத்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி (11.11.11) பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்னார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல