திங்கள், 18 அக்டோபர், 2010

இனிப்புக்கடை திருடனின் கையை வெட்ட ஈரானிய நீதிபதி தீர்ப்பு

இனிப்புக் கடையொன்றிலிருந்து சொக்லேட்டையும் தின்பண்டங்களையும் திருடிய இளைஞன் ஒருவனின் கரங்களை வெட்டுமாறு ஈரானிய நீதிபதியொருவர் தீர்ப்பளித் துள்ளார்.

இது தொடர்பான செய்தியை அந்நாட்டு அரசாங்கத்துக்கு பகுதியாக சொந்தமான “பார்ஸ்' செய்து கவர் நிலையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

21 வயதான மேற்படி இளைஞன் காரொன்றை சந்தேகத்துக்கிடமான முறையில் ஓட்டிச் சென்றவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டான்.

இதன்போது அவனது காரில் பணத்துடன் பெருமளவு சொக்லேட்டுகள் மற்றும் தின் பண்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இனிப்புக் கடையொன்று கொள்ளையிடப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

பொலிஸார் இளைஞனிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குர்ஆன் சட்டவிதிகளின் பிரகாரம் கடையொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடியமை பாரிய குற்றம் என தெரிவித்தார்.

மேற்படி இளைஞனுக்கு கையை வெட்டுவதற்கு மேலதிகமாக 6 மாதகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல