கடந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது தமது மாமியாரை அவரது இரு மருமகள்மார் பாண் தயாரிக்கப்படும் “ஒவன்' அடுப்பில் தள்ளி படுகொலை செய்துள்ளனர்.
மாகாண தலைநகரிலிருந்து கிழக்கே 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பின்தங்கிய அபே பாண்ட் மாவட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் படுகொலை செய்யப் பட்ட பெண்ணின் மருமகள்மால் இரண்டாவது மருமகள் கர்ப்பவதியாக இருந்தமையால் அவரை படுகொலை செய்யும் திட்டத்தை தலிபான்கள் தற்காலிகமாக கைவிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மாமியார் மற்றும் மருமகள்களின் பெயர்கள்வெளியிடப்படவில்லை.
““அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஆத்திரமடைந்த மருமகள்மார் அவரை “ஒவன்' அடுப்புக்குள் தள்ளியுள்ளனர். கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய அவர் உயிழந்துள்ளார்'' என ஆப்கான் அதிகாரியொருவர் கூறினார்.
இறந்த பெண்ணின் சகோதரர் ஒருவரிடம் துப்பாக்கியைக் கொடுத்த தலிபான் போ ராளிகள் மேற்படி மருமகள்மாரை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்ல உத் தரவிட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் தலிபான் போராளிகளின் உத்தரவின்றி அவரது சொந்தக் குடும்பமே அவரைக் கொன்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக