திங்கள், 18 அக்டோபர், 2010

அதிசய லில்லி (படங்கள் இணைப்பு)

அதிசய 'லில்லி' இனங்களில் பலவகை இருக்கின்றன. அவற்றில் மிகவும் பிரமாண்டமானது ‘விக்டோரியா அமசோனிகா’ என்னும் வகை லில்லியாகும்.

இந்த லில்லி இனத்தினுடைய இலை சுமார் 1.5 மீற்றர் விட்டமுடையது. அந்த இலைகளைப் பார்க்கும்போது பெரிய தாம்பூலம் போல் காட்சியளிக்கும். இந்த பிரமாண்டமான இலைகளில் சுமார் 15 கிலோகிராம் எடையுள்ள எந்தப் பொருளையும் வைக்கமுடியும்.

நெதர்லாந்திலுள்ள 'பிளிஜ்டோர்ப்' மிருகக்காட்சிசாலையில் இந்த லில்லி பூக்களுக்கும் அதிக கிராக்கி இருக்கிறது. இங்கு மலர்ந்துள்ள லில்லி பூக்கள் முதல்நாள் இரவில் வெள்ளை நிறமாக காட்சியளிக்கும். மறுநாள் இதன் நிறம் இளம் ஊதாவாக மாற்றமடைவது அதிசயிக்கத்தக்கது. இதனுடைய பூக்கள் சுமார் 14 சென்ரிமீற்றர் விட்டம் கொண்டவை.

அதுமட்டுமல்லாமல் அங்கு இருக்கும் லில்லி இலைகளில் சிறு பிள்ளைகளை உட்கார வைத்து படம் எடுப்பதற்கும் அனுமதிக்கிறார்கள். இதனால் இந்த லில்லி இனங்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம்தான்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல