அஸியா கான் (23 வயது), 9 மாதங்களுக்கு முன்பு பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்த மணமகனை கரம் பிடிக்க பிரித்தானியாவுக்கு வந்தார். அங்கு அவருக்கும் நவீத் கான் (27 வயது) என்பவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
தனது கணவர் நவீத், நவீத்தின் தாயார் மற்றும் நவீத்தின் சகோதரிகள் இருவருடன் பிரட்போர்ட்டிலுள்ள வீடொன்றில் அஸியா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினம் வீட்டிலிருந்த ஏனையவர்கள் பொருட் கொள்வனவிற்காக வெளியில் சென்றிருந்த சமயம், அஸியா தன் மீது எரியக் கூடிய திரவத்தை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனக்கு தீ வைத்த சமயம் வீட்டின் முன் கதவையும் தோட்டத்துக்கான கதவை யும் மூடியிருந்ததால், வீடு திரும்பிய கணவரான நவீத் உதவி கேட்டு கூக்குரலிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அயலவர்களின் உதவியுடன் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே பிரவேசித்த போது, வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் கருகிய நிலையில் அஸியா வின் சடலம் காணப்பட்டது.
வழமையாக அஸியா வீட்டிற்கு வெளியில் வருவது அபூர்வம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அஸியா உண்மையிலேயே தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக