புதன், 13 அக்டோபர், 2010

ஒபாமா மீது புத்தக வீச்சு (படங்கள் இணைப்பு)

செனட்டர் ஆசனத்துக்கான பிரசாரத்தில் ஈடுபடச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மேடையில் நின்று கொண்டிருந்த சமயம் அங்கு கூடியிருந்த கூட்டத்திலிருந்து அவரது தலையை நோக்கி புத்தகம் ஒன்று வீசப்பட்டது.

இருப்பினும் அப்புத்தகம் அவரின் தலையில் படாமலேயே கீழே விழுந்துவிட்டது. இதனால் அக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை யார், ஏன், எதற்கு, செய்தார்கள் என்று தெரியவில்லை.

இச்சம்பவம் நடந்து சிறிது நேரத்தின் பின்னர் பொலிஸார் ஒரு நிர்வானமான நபரை கைது செய்து கொண்டு சென்றார்கள். இந்த நபருக்கும்,ஒபாமாமீது வீசப்பட்ட புத்தகத்திற்கும் ஏதும் தொடர்புண்டா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.

 இதுபற்றி மேலதிகமாக தெரியவருவதாவது, கூட்டத்தில் ஒபாமா பேசிக்கொண்டு இருந்தபோது மேடையை நோக்கி நிர்வாண கோலத்தில் ஒரு நபர் முன்னேறி வந்து கொண்டிருந்தார். அதனைக்கண்ட பொலிஸார் ஆச்சர்யமடைந்து உடனே பாய்ந்து சென்று அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஜான் ரோட்ரிக்ஸ்

அந்த மேற்படி நபரை, ஜான் ரோட்ரிக்ஸ் (24) விசாரித்தபோது தான் பந்தய பணம் US 4.5 கோடிக்காகவே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன் நிவாணமாக சென்றேன் என்றார்.

அல்கி டேவிட்
மேலும் அவர் தெரிவிக்கையில், இங்கிலாந்தை சேர்ந்த அல்கி டேவிட் என்ற கோடீஸ்வரர் ஒபாமா முன் பெண்ணோ, ஆணோ நிர்வாணமாக சென்றால் US 4.5 கோடி பரிசு தருவதாக இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இந்த குறும்பான செய்தியை பார்த்துதான் நிர்வாண முயற்சியில் ஈடுபட்டதாகவும் மற்றும்படி ஓபாமாவின் மீது வீச்ப்பட்ட புத்தக வீச்சிற்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்ததாக பொலிஸார் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல