சனி, 6 நவம்பர், 2010

அரசிடம் நான் கோரிக்கை முன்வைக்கவில்லை

உடல் நலக் குறைவால் வல்லெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சசை பெற்றுவரும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார், வெளிநாடுகளில் உள்ள அவரது பிள்ளைகள் பார்க்க விரும்புவதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை அரசிடம் கோரிக்கை முன்வைத்ததாகவும், அதனை அரசு முற்றிலும் மறுத்ததாகவும் இந்திய இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்கு எம்.கே.கிவாஜிலிங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து அவர் தெரிவிக்கையில் :-

பார்வதியம்மாளின் பிள்ளைகள் பாதுகாப்பு அச்சம் காரணமாக நேரடியாக வந்து பார்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை. அதேபோல அவர்களது குழந்தைகளையோ, பேரப்பிள்ளைகளையோ அனுப்புவதற்கோ அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையிலே அரசாங்கத்துடைய அனுமதியென்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்நிலையிலே அவர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்தால் தான், ஏனையவையெல்லாம், ஆகவே அரசாங்கத்திடம் நான் கோரிக்கை முன் வைத்தேன் என்பது தவறு. என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல