சனி, 6 நவம்பர், 2010

இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் சிங்களவர்கள்!'

1977 இனக்கலவரத்தில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது எனது குடும்பம். எமது லக்கி லேண்ட் பிஸ்கட் கம்பனி சில இன வெறியர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட போது, எம்மையும் படுகொலை செய்ய அவர்கள் முற்பட்டார்கள். அப்போது எம்மை காப்பாற்றியவர்கள் சிங்களவர்ளே!

இந்த உதவியை நாம் வாழ் நாளில் மறக்கவே மாட்டோம்' என இலங்கை நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

அஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடருக்காக சிட்னியில் தங்கியிருக்கும் அவர் ஊடகமொன்றுக்கு பேட்டி அளிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

1983 கலவரத்தின் பின் இயல்பு நிலைஏற்பட்டிருந்தது. நான் ஏழுவருடங்கள் கண்டியில் விடுதியில் தங்கியிருந்து பாடசாலை படித்தவன்.
வடக்கில் யுத்தம் நடக்கின்ற போது சிங்களவர்களுடன் தான் விடுதியில் இருந்தேன். அவர்களால் எனக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

அடுத்து கண்டியில் இருந்ததால் வடக்கு அரசியல் நிலைமைகள் பற்றி தெரியாது. தெரியாத அரசியலை பற்றி என்னால் பேச முடியாது தானே என அவர் தெரிவித்தார்.


1995 ம் ஆண்டு அஸ்திரேலிய மண்ணில் வைத்து நடுவர் டரெல் ஹயேரினால் உங்களது பந்துவீச்சு தவறானது என கூறப்பட்ட போது எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு பதில் அளித்தத முரளிதரன்

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட காரர்களில் ஒருவரான டொன் பிரெட்மென், தான் பார்த்தவற்றில் நடுவர் ஒருவர் வழங்கிய மிக மோசமான தீர்ப்பு இது என தெரிவித்தார். அன்றைய தருணம் நான் உடைந்து போனது உண்மை தான். ஆனால் எனது அணியினர் எனக்கு பக்க பலமாக நின்று என்னை தளர்வடைய செய்யாமல் பார்த்துக்கொண்டனர் என்றார்.

கிரிக்கெட் வரலாற்றில் பந்துவீச்சில் இமாலய சாதனை படைத்திருக்கும் முரளிதரனை கௌரவப்படுத்தி, வார்ன் - முரளிதரன் த்ஃரோபி எனும் போட்டித்தொடரொன்றை அஸ்திரேலிய கிரிக்கெட் கவுன்சில் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தற்போது நடைபெற்று வரும் அஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடரின், நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் வென்று, 26 வருடங்களின் பின் அம்மண்ணில் தொடரொன்றை கைப்பற்றியிருக்கிறது இலங்கை அணி!

நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள மூன்றாவது ஒரு நாள் போட்டி, முரளிதரன் அஸ்திரேலிய மண்ணில் விளையாடவிருக்கும் இறுதிப்போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல