சனி, 6 நவம்பர், 2010

'நமீதா ஐ லவ் யூ'

கன்னடத்தில் நமீதா நடித்துள்ள புதிய படத்துக்கு நமீதா ஐ லவ் யூ என்றே பெயர் வைத்து விட்டனர். படத்தில் யோகா டீச்சராக கலக்கியுள்ளாராம் நமீதா.

கவர்ச்சி, கவர்ச்சி, கவர்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற இமேஜுடன் இருப்பவர் நமீதா. இவரை வைத்து கவர்ச்சிப் படம் மட்டுமே எடுப்பது என்ற கொள்கையுடன் அனைத்து திரையுலகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஹூ படம் மூலம் கன்னடத்திலும் புகுந்த நமீதா, முதல் படத்திலேயே ரசிகர்களை படபடக்க வைத்து விட்டார். இப்போது நமீதா ஐ லவ் யூ என்ற படம் மூலம் கன்னட ரசிகர்களுக்கு யோகா கற்றுத் தர கிளம்பி விட்டார்.

ஜெயசிம்ம ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் யோகா டீச்சராக வருகிறாராம் நமீதா.

படப்பிடிப்பின்போது படு சமர்த்தாக, நேரம் தவறாமல் கரெக்ட்டாக வந்து போகிறாராம் நமீதா. இதைச் சொல்லிச் சொல்லி மாய்கிறார் ரெட்டி. கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு நமீதா லேட்டாக வந்ததில்லையாம் நமீதா.

மாபியா கும்பலுக்கு எதிராக போராடும் யோகா டீச்சராக நடித்துள்ளாராம் நமீதா. நமீதா படம் என்றாலும் கூட கவர்ச்சி பெரிய அளவில் இருக்காதாம். கதைக்கு அது தேவைப்படாது என்பதால் கவர்ச்சி விஷயத்தை அடக்கியே வைத்துள்ளேன் என்கிறார் ரெட்டி.

படத்தில் யோகா செய்வதோடு, பைட்டும் போட்டு அசத்துகிறாராம் நமீதா. இது சமூகத்திற்கு 'மெசேஜ்' தரும் படம் என்கிறார் ரெட்டி.


அப்ப 'மசாஜை' எதிர்பார்க்க முடியாதுதான்!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல