கடந்த ஜூலை மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்த பெருந்தொகைப் பணமானது தமக்கு பெரும் தலைவலி தருவதாக இருந்ததால், அதில் 98 சதவீதத்தை சமூகத்துக்கு அளிக்க தீர்மானித்ததாக மேற்படி தம்பதியான அலென் லார்ஜும் (75 வயது), வயலட் லார்ஜும் (78வ யது) தெரிவித்தனர்.
இந்த தம்பதி நோவா ஸ்கொடிராவிலுள்ள லோவர் துறுரோ என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் வயலட் விபரிக்கையில், ““பணத்தால் எவ்வளவோ நல்ல விடயங்களை செய்ய முடியும். அந்த அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் அந்த வாய்ப்பை தவறவிடப்போவதில்லை'' என்று கூறினார்.
முன்னாள் உலோகங்களை உருக்கியொட்டும் பணியாளரான அலென் விபரிக்கையில், நாங்கள் கோடீஸ்வரர்களாக வாழ்வதைவிட, சௌகரியமாக இருப்பதை விரும்புகின்றோம். இந்த பணத்தால் வென்றது எதுவுமில்லை. நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சொத்தாக உள்ளோம்'' என்று கூறினார்.
அத்துடன் தம்மிடம் அதிகளவு பணம் இருந்தால், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அதனை தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளக்கூடும் எனவும் மேற்படி தம்பதி அச்சங் கொண்டுள்ளனர்.
147 வருடங்கள் பழைமையான வீட்டில் வாழ்க்கையைத் தொடரப் போவதாக தெரிவித்த அலென், ““நாம் மகிழ்ச்சியை பணம் கொடுத்து வாங்க முடியாது'' என்று கூறினார்.
இத்தம்பதி தமது பரிசுப்பணத்தை புற்றுநோய் மற்றும் நீழிவு நோய்களுக்கு எதிராக போராடும் அமைப்புக்கள், உள்ளூர் தீயணைப்பு திணைக்களம், ஆலயங்கள், மயானங்கள், செஞ்சிலுவைச் சங்கங்கள், கிறிஸ்தவ அமைப்புக்கள், மருத்துவ மனைகள் உள்ளடங்கலாக பல பொது ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக