சனி, 6 நவம்பர், 2010

ஹொங்கொங் நாட்டில் விமானத்தில் ஏறிய வயதான மனிதர் கனடா வந்தடைந்ததும் வாலிபராக மாறியுள்ளார் (படங்கள் இணைப்பு)

ஆசியாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் வயதான மனிதரைப்போல் போல் சிலிக்கோன் மாஸ்க் அணிந்து ஹொங்கொங்கில் இருந்து கனடா வந்து சேர்ந்துள்ளார். இவர் விமானத்தில் ஏறிய போது இவரைக் கண்ணுற்ற ஒரு விமான அதிகாரி இவரது கைகள் இளம் வயதினருடைய கைகளைப்போன்று இருந்ததால் இவர் மீது சிறிது சந்தேகம் உண்டாகவே இவரை நோட்டம் விடத்தொடங்கினார்.

விமானம் கனடா வன்கூவர் விமான நிலையத்தை வந்தடைந்ததும், இந்த வயோதிப நபர், 20 வயது இளைஞனாக மாறி விமானத்தில் இருந்து வெளியேறும் போது கைது செய்யபபட்டுள்ளார்.

இதுபற்றி கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கையில், "இந்த நபர் தனது முகத்தையும், கழுத்துப்பகுதியையும் மட்டும் சிலிக்கோன் மாஸ்க் மூலம் வயோதிபர் போல் உருமாற்றி விமானத்தில் ஏறியுள்ளார். அவரது மற்றைய உடற்பாகங்களில் எதுவித மாற்றமும் இருக்கவில்லை. அதன் பின்னர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, இவர் விமானத்தின் கழிவறைக்குள் சென்று இவரது மாஸ்க்கை அகற்றி உண்மையான தோற்றத்துடன் திரும்பியுள்ளார். இந்த விடயம் கண்காணிக்கப்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டவுடன் இவர் கைதுசெய்யப்பட்டார்" என்று தெரிவித்தனர்.


இவரது பயணப் பைகளைஅதிகாரிகள் சோதனையிட்ட போது அவரின் பைக்குள் சிலிக்கோனால் ஆன வயதானவர் போன்ற தலை, கழுத்து முகமூடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் தொப்பி, மற்றும் கண்ணாடி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது அவர் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல